பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

சிரிப்பதிகாரம்



காட்சி - 10

இடம் புத்தர் கோட்டத்தின் நடுப்பகுதி

(நன்றாய் இருள் படர்ந்திருக்கும் இரவு - இளவரசன் யாருக்கும் தெரியாமல் அங்கு வருகிறான்)

உதய : மேகலா கண்ணே!

; தாங்களா!

உதய வேறு யார் வருவார்கள்.? மேக எப்படி வந்தீர்கள். இந்நேரத்தில் யாரும்

இங்கு வரக்கூடாதே! கட்டுப்பாடுள்ள புத்த மண்டபத்துக்கு ஏன் வந்தீர்கள்?

உதய ! அதைத்தான் நானும் உன்னைக் கேட்க வந்தேன் மேகலா. காதல் கிளி காவி மடத்துக்கு ஏன் வந்தது? கலைத் தெய்வம் காவி மண்டபத்திற்கு வந்த காரணம்?

மேக : காரணம் கடந்தகால பயங்கரம்:

உதய : பயங்கரமா என்ன சொல்லுகிறாய் மேகலை. இதோ பார்! காணாத கடந்த காலம் ஒரு கற்பனை எதிர்காலமும் ஒரு இருண்ட கனவு எதிரில் நிற்கும் நிகழ்காலம் ஒன்றுதான் நித்தியம்! இதைப் பயன்படுத்துவதே பிறவியின் வட்சியம்! வாழ்வின் தலைவாசல் வா. வா’ என்று வரவேற் கிறது! எங்கே! எங்கே? என்று நம்மை எதிர் பார்க்கிறது இன்ப உலகம்! காதல் - காதல்’ என்று காமன் கீதம் மீட்டுகிறான்.

மேக : அதில் சாதல். சாதல்’ என்ற சங்கொலியைக்

கேட்கிறேன் இளவரசே!

உதய இதென்ன திடீர் வேதாந்தம்?