பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

101




மேக :இதுதான் என் தாய் தந்த பொக்கிஷம்?

உதய :பெற்ற தாயே பெண்ணின் வாழ்வைக் கொல்வ

துண்டா?

மேக :இல்லை. கண்கண்ட கருணையின் தெய்வம்

என்தாய்! அந்தக் கருணையின் கண்ணிர்
வெள்ளத்திலே என் உள்ளம் தூய்மை பெற்றது.
தடுமாறிய நான் தெளிவு கண்டேன்! இதுதான் உண்மை...!


உதய :அப்படியானால் கள்ளமற்ற நம் உள்ளங்கள்

செய்த முடிவெல்லாம்.

மேக :சிறு பிள்ளைகள் பேசுகின்ற சிங்கார மழலை

மொழி, கால வெள்ளத்திலே கரைந்து போகும்
களிமண் மண்டபங்களைக் கட்டினோம்! நிலை
யானதென்று நீர்க்கோலம் போட்டு விட்டோம்.
இளமையின் இன்பம். முதுமையின் துன்பம்!
முடிவில் மரணம்! அதற்குள் வீண் துயரம்
எதற்காக இளவரசே! . *

உதய  : முடிவற்ற இந்த மூட வேதாந்தம் உன் மதியில்

ஏன் புகுந்தது மேகலா விருப்பான உன்னெஞ்சில்
வெறுப்பான நெருப்பைக் கொட்டியவர் யார்?
கள்ளம் கபடமற்ற உன் வெள்ளை உள்ளத்தில்
கவலை என்னும் விஷத்தை யாரோ கொட்டி
விட்டார்கள். கண்ணே! தோன்றியதெல்லாம்
மறைவது இயற்கை அதற்காகத் தோன்றிய
உடனே அழிந்து போக வேண்டுமா மேகலா?
இந்த மாயாவாதம் உலகிற் பரவினால் உலகமே
பாழாகி விடும் கண்ணே! -

மேக :இந்த உலகம் நம்மை வாழ விடாது இளவரச

வேண்டாம்! எனக்காகத் தாங்கள் சிரமப்பட
வேண்டாம்! தாங்கள் இந்தச் சோழ ராஜ்யத்தின்
சக்கரவர்த்தியாக வேண்டியவர்கள்! உங்கள்
பெருமையான சரித்திரப் பொன்னேடுகளில் என்