பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

சிரிப்பதிகாரம்




உதய :மரணத்தைக் கண்டே பயப்படாதவன் நான்!

புறப்படுகிறாயா? இல்லையா?

மேக :அரச அதிகாரம் புத்த மடத்தில் செல்லாது

இளவரசே! -

உதய :பார்க்கிறேன் அதையும் தடுப்பது யார் என்னை

இங்கே? மேகலை மனத்தை மந்திரம் செய்து
மாற்றிய அந்தச் சண்டாளர்களைப் பலியாக்கு
வேன். நீ என் செல்வம் உரியவன் அழைக்கிறேன்
எவனும் என்னைத் தடுக்க முடியாது!

மேக :நானே தடுத்தால்!

உதய :நீயே தடுத்தால் மேகலா! நீயா பேசுகிறாய்?

மேக :நிச்சயம்! சத்தியமாக நீங்கள் போகத்தான் வேண்டும். போய் ::விடுங்கள்!

உதய :ஆ போய் விடுங்கள்! வேண்டாம் கண்ணே உன்

வாயால் மற்றொரு முறை அப்படிச் சொல்லாதே
மேகலா! என் இதயம் இரண்டாக வெடித்து
விடும்! உன் வாய் திறந்து போ என்றா
சொல்லுகிறாய்?


மேக :ஆம் இளவரசே!

உதய :என்னையா?

மேக ;உங்களைத்தான்

உதய :போகிறேன் கண்ணே போகிறேன். உன்னை

விட்டல்ல. இந்த உலகத்தைவிட்டே போய்
விடுகிறேன்! கடைசியாக இந்த ஒரு வேண்டு
கோளையாவது நீ நிறைவேற்றுகிறாயா?

மேக :என்ன?

(தன் கட்டாரியை அவள் கையில் கொடுத்து)

உதய :இதோ பல பகைவர்களை நாசமாக்கிய இந்தக் கட்டாரி! எடுத்துக்கொள். என் மார்பைப்