பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்:

105


பிளந்து என் இதயத்திலே மின்னும் உன்னுருவை
எடுத்துக் கொண்டு, உடலை உன் கையாலேயே
எரித்துப் சாம்பலாகப் பொசுக்கிவிடு மேகலா,
பொசுக்கிவிடு மேகலா!

மேக :சுவாமி

உதய :உம் ஏன் தாமதம்? உயிர்க்கொலை பாவம் என்று

உன் வேதாந்தம் சொல்கிறதா? அப்படியானால்
என் உயிரை அணு அணுவாகச் சித்ரவதை
செய்கிறாயே? இந்தப் பாவத்தை எந்தக் கடவுள்
மன்னிக்கப் போகிறான்?


அறவணர் :குழந்தைகளே! காவேரி நதியோடு போட்டி

யிடுகின்றனவே உங்கள் கண்விழிகள்! அதென்ன
கண்ணிர்? அறிந்தேன்? உங்கள் கண்ணிர் ஆசை
யெனும் மாசகற்றும். ஆனந்த ஊற்றாக
மாறட்டும் துன்பமெனும் அழுக்ககற்றி, தும்பை
மலர்போல் உங்கள் உள்ளம் பொலியட்டும்!
மாயக் கண்ணிர் தெளிந்ததும் பளிங்கு போல்
தெளிவு பிறக்கும்! வேதனை தீரும் உண்மை
விளங்கும் நாடாளும் மன்னன் மகன் நள்ளிரவில்
இங்கு ஏன் வந்தது?

உதய :செத்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி! சிரித்துப் பேசுகின்றீர்கள்!


அறவ :நீயும் சிரிக்கலாம் மைந்தா உள்ளம் சிரித்தால் உதடும் சிரிக்கும் உலகமும் சிரிக்கும்!

உதய :இல்லை சுவாமி! குற்றமற்ற என்னை

மேகலை அழவைத்து விட்டாள்!

அறவ :இல்லை. உன் மனமே உனக்கு எதிரியாகி

விட்டது. மனோ வேகத்தில் குளிர் காய்ச்சலால்
பேசுகிறாய்! மேகலை தெய்வமகள்! மகனே!
காவலன் மைந்தன் நீ! எதிர்கால வேந்தன்!
பாராளும் மன்னன் மகன் நீ! மாதவியின் மகள்