பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

சோழன் :

உதய

  • சிரிப்பதிகார

உதயா! ஏன் கோழைபோல் தேம்புகிறாய்? காவலன் மகன் நீ! கணிகை அவள்! வீரனா யிருந்து உன் பெருமையை நிலைநாட்டு.

தோற்றுவிட்டேன் தந்தையே! தோற்றுவிட்டேன்! மனப்போராட்டத்திலே அடிபட்டு மரணவஸ்தை யிலே தவிக்கிறேன்! அவள் இல்லாவிட்டால், நானில்லை தந்தையே!

நீ இல்லாவிட்டாலும் அவள் இருப்பாளடா முட்டாள் என் பொறுமையைச் சோதிக்கிறாய்! என் கோபம் குமுறுகிறது!

குமுறி, TTT கொன்று விடுங்கள்

தந்தையே!

போதும்! உன்னைப் பெற்ற பாபமே எனக்குப் போதும்! கொல்லும் பழிவேறு எனக்கு வேண்டாம் வீரர் வழி வந்தவன் நான் உன்னைப் போன்ற கோழையை, பெண் பித்தனைக் கொல்லும் அளவுக்குச் சோழ மன்னன் தாழ்ந்து விடவில்லை. கடைசியாகக் கேட்கிறேன். நீ என் கட்டளைக்குப் பணிய விருப்பமா? இல்லையா? எனக்குப் பின் சோழ சாம்ராஜ்யத்தின் மணி முடியைச் சூட்டிக் கொள்ளப் போகிறாயா

இல்லையா?

உதய

சோழ

நான் மன்னனாக வேண்டுமானால் மேகலை மகாராணி ஆகவேண்டும்!

மடச்சிறுவனே! மதியிழந்தவனே மமதையின் பேயே! மனிதப் பண்பை இழந்தவன், மைந்தனே ஆயினும் மன்னிக்க மாட்டான் மன்னன்! போய் விடு. கண்முன் நிற்காதே! இன்றுடன் நீ என் மகனல்ல. போ வெளியே! பூம்புகாரின் எல்லையை விட்டுப் போய்விடு! உன்னை மாற்றுவதைவிட மறப்பது சுலபம்! போ!