பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் : - 1 9

மேக

உதய

உதய

மேக

உதய

வீரமிழந்த கோழையாய், உயிரிழந்த உடலாய், செல்லரித்த சவமாய், எவர்க்கும் பயனற்றவனாய், மன்னன் ஆணைக்கு மறைந்து, கள்வன்போல்

வாழும் என்னை, உன் கையால் கொன்று, என்

உயிருக்கு விடுதலை கொடுத்துவிடு, மேகலா - இதைத்தான் அன்றும் சொன்னேன். இன்றும் சொல்கிறேன். என்னைக் கொன்றால், உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு மேதலா! யோசிக் காதே என் வேதனைக்கு ஒரு முடிவு கட்டு.

இளவரசே!

இளவரசன். நானல்ல மேகலா. இன்று நானொரு ஏழை வாலிபன். உன்னை எண்ணி ஏங்கும் அபாக்கியவான்!

உறைந்து கல்லாகிப்போன உணர்ச்சிகளுக்கு இனி

உங்கள் கண்ணிர்கூட உயிர் கொடுக்க முடியாது! பெண் எளிதில் ஒரு முடிவுக்கு வரமாட்டாள்! வந்தபின் அவள் மாறமாட்டாள்!

வைராக்கியம் என்ற பேய் பெண்களை மட்டும் பிடித்து ஆட்டுவதில்லை மேகலா ஆண்களையும் அந்தப் பேய் பிடிப்பதுண்டு! இதோ பார் என்னை. உறுதி என்கிறாயே! முதலில் நீ எனக்குக் கொடுத்த உறுதி எங்கே போனது?

அவ்வளவும் காவேரி வெள்ளத்தில் கலந்த

கரும்புச்சாறுதானா? “.

அறிவு தெளிவற்றபோது, என் அன்னையைக் காணாதபோது, இளமை என்ற மயக்கத்திலே ஏதோ உளறியிருப்பேன். அதை உறுதி என்று எடுத்துக் கொண்டது உங்கள் குற்றம்! தெரியும்! பெண்கள் எப்போதுமே சுயநலக் காரிகள் தங்கள் குற்றத்தைத் தலை போனாலும் ஒப்புக் கோள்ளமாட்டார்கள். சரி நடந்த