பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் : 137

? .. 45tI 1

மேக

உதய

மேகலா! தவறு. காயசண்டிகா பெயரும் உருவமும் மாறிவிட்டாலும், நீ என் மேகலை தான்!

(காஞ்சனன் மறைந்திருந்து, /ே/சுவதை உற்றுக் கேட்கிறான்) -

மற்றொரு முறை மேகலை என்று கூப்பிடா தீர்கள். கண் தெரியவில்லை? நான் காய சண்டிகை.

மேகலையின் அழகை உனக்குள் ஒளிய வைத்தி ருக்கும் காயசண்டிகா கருணை செய். கந்தர்வப் பெண் மாதிரி வேடமிட்டால் போதுமா? காரியத்திலும் அப்படியே இருக்க வேண்டாமா! வா கண்னே! வா! விரிந்த உன் கூந்தலை வண்டு முரலும் மலரணையாக்குவேன்! சுருண்டு, சுவை யற்று சூன்யமாகிவிட்ட உன் சுந்தர மேனியை ஸ்வர்ண விக்கிரகமாக்குவேன்! வா! காட்டிலும், மேட்டிலும், கடும் துயர் விரதத்திலும் பட்டுத் தளர்ந்து விட்ட உன் உடலைப் பட்டுப்போல் காப்பாற்றுவேன். வா. போகலாம்! அன்னச் சிறகினும் மென்மையான உன் திருவடிகள் பட்டால், என் அரண்மனை ஆலயமாகி விடும் கண்ணே! வண்ணக் கலவையின் வான ஒவியமே! என் எண்ணக் கலவையை எல்லாம் எடுத்து உன் கன்னங் கருக்கிருட்டுப் பின்னலிலே முடிந்து விட்டாய்! வா கண்ணே! மாறன் கணைகள் மரணத்தின் ஈட்டிகளாக என் மார்பைத் துளைத்துவிட்ட இந்த ரண காயங்களில், பெருக் கெடுத்தோடும் துயர இரத்தத்தை, உன் இன்ப ஸ்பரிசத்தால் குனமாக்கி, என் உயிரைத் திருப்பிக்கொடு, காலில் விழுந்து கெஞ்சுகிறேன். வா கண்ணல்ல! ஒளியாதே! ஓடாதே! விட மாட்டேன்.