பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; 141

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

ஆமாம், உனக்கு பெரிய தலை இருக்கு! ஆகையாலே நீ பெரிய தலைவன்தான். அதுவும் பிறவித் தலைவன்.

அதில்லே, என்னை ஒரு ஜீனியஸ் என்று இந்த உலகம் சொல்லனும்டா,

நீ ஜீனியஸ்தாண்டா. நிறைய சீனி சர்க்கரை சாப்பிடுறே ஆகையாலே நீ ஜீனியஸ்தான்!

நான் ஒரு காவியத் தலைவன் ஆகணும்.

இது ரொம்ப சுலபம்! காவிக் கலரிலே டிரஸ் பண்ணிக்கோ காவியத் தலைவன் ஆயிடுவே.

பாரோர் புகழும் ஈரோ ஆவணும்.

அடிக்கடி யாரையாவது கேரோ பண்ணு, உடனே ஈரோ ஆயிடுவே. இல்லே ஏதாவது ஒரு ஒடாத பட்டத்திலே ஒடி விளையாடி ஹீரோ ஆக்ட் பண்ணு ஜீரோ, நீ ஒரு நீரோ, யாரும் எட்ட முடியாதபடி பட்டங்கள் பதவிகள் இரண்டும் வரணும். அதுகள் எல்லாம் ரொம்ப ரொம்ப சுலபங்கள்! ஒரே ஒரு ரூபாய்க்கு ஒரு பட்டம் வாங்கு, ரெண்டு ரூபாய்க்கு நூல் வாங்கு ஆடிக் காத்திலே பட்டத்தை விட்டு, நூலை அறுத்துவிடு. உன் பட்டத்தை யாருமே எட்ட முடியாது.

நண்பா பட்லர். நான் எப்படியும் நாடு போற்றும் தலைவனாகியே தீரவேணும். இது என் அறிவின் களிப்பு: ஆசையின் அழைப்பு காலத்தின் தீர்ப்பு! என் பெயர் கொட்டை எழுத்திலே பத்திரிகை யிலே அடிபடனும் நாட்டிலே தலைவர்களுக்கு ஏகப்பட்ட பஞ்சம் வந்து விட்டது. தலைவர் பஞ்சத்தைத் தீர்க்கவே நான் தலைவனாய்ப் பிறந்துள்ளேன். பத்திரிகைகள் என் பெயரைக் கண்டு பயப்படனும்.