பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ;

இட்லர் .

பட்லர் :

இட்லர்

டட்லர் :

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

143

புலிகள் எப்பவுமே புதுக் கூச்சலைக் கேட்டா மக்கலுக்கு ஒரு சபலம்! அதுதான் நம்ம பலம்! மத்தவங்களை தாக்கிப் பேசுனா மகில்ச்சியோடு மாலை போடுவாங்க கை தட்டுவாங்க.. காசு தருவாங்க.. காலைப் புடிப்பாங்க. என்னா சொல்றே? பலமை ஒலிப்புப் போர் முனைன்னு பேர் வைக்கட்டுமா?

பலமை ஒலிப்புப் போர்முனை. பிரமாதம். சிறுமலை வாழைப்பழம் மாதிரி சும்மா, அப்படி கமாகமான்னு மணக்குது. கேக்கும்போதே இனிக்குது. சுத்த வலவலா கொல கொலான்னு இல்லாமே, பல பலா சிலுசிலு குலுகுலுன்னு இருக்குது இல்லே? ஆமாம். இந்தக் கொல்கைப்படி நடந்தா பலமை யான பலக்க வலக்கங்களை ஒலிச்சுப்பிடலாம். கலையையும் வலத்து புடலாம். எதுத்துப் பேசறவங்கலை கில்லிப் போட்டுடலாம். கில்லி! இல்லை? நம் கொல்கை வால்க! அடே பட்லர்! அதோ பார். மறுபடியும் அந்த பட்டு மாமி முகத்தை நீட்டிக்கிட்டு வர்ரா! ஆம், இக்கால இராமனாகிய உன்னைத் தேடி அந்த சூர்ப்பணங்கை வர்ரா. நோ. நோ. இந்த அர்ச்சுனனைத் தேடி அல்லி ராணி வர்ரா. - பவளக் கொடின்னு சொல்லுடா! இல்லை ‘பச்சைக் கொடி காதலின் கிரீன் சிக்னல் வருது டோய். ஆசையப்பாரு! அவகிட்ட நான் பேசறேன், கொஞ்ச நாலா அவன் நம்மலையே சுத்திகிட்டி ருக்கால் (பட்டு வந்ததும்) வாய்யா பட்டு. வா நல்லாயிருக்கயா..? உடம்பு எப்படிடா இருக்குது மேன்? -