பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

iன் சிரிப்பதிகாரம்

பின்பெஞ்சுமேல் அமர்ந்தபடி ஒரு பிஞ்சு மாணவன் கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டான் என்பதற்காக ஒரு கல்லூரி முதல்வர் அஞ்சு ரூபாய் அபராதம் போட்டார்.

நான் கேட்கிறேன். அந்தப் பஞ்சை மாணவன் செய்த குற்றமென்ன? அவன் அந்தப் பெண் தலையில் சூடிய ரோஜாப் பூவைச் சாப்பிட் டானேயன்றி, பெண்ணையா சாப்பிட்டான்? இல்லையே? ஆகவே தோழர்களே, இங்கே கள் குடிப்பது தவறு என்பது போல, ரோஜாப்பூ சாப்பிடுவது குற்றமா? இது மட்டுமல்ல நண்பர்களே!

பெண் மாணவிகளைக் கண்டால் விலகி நடக்க வேண்டுமென்று பிரின்ஸ்பால் பேசுகிறார்! சிந்தனையிருந்தால் அவர் இப்படிப் பேசியிருப் பாரா? துஷ்டனைக் கண்டால் துர விலகு என்பதுதான் பழமொழி! ஆனால், இங்கே இந்தக் காலேஜிலே பெண் மாணவிகளைக் கண்டால் ஆண் மாணவர்கள் தூர விலக வேண்டுமென்று உத்தரவு! அப்படியானால் நமது பெண் மாணவி கள் எல்லாம் துஷ்டர்களா: பயங்கரி களா, பத்ரகாளிகளா? என்று முதல்வர் நினைக் கிறார்களா?

ஆம் நாங்கள் பத்ரகாளிகள் தான்!

ஆ, காலி காலி! அப்படின்னா நான் காளிதாசன்! -

ஆம்! காளிதான்! உம்மைப் போன்ற காலிகளை அப்போதுதான் ஒடுக்கி விரட்ட முடியும்.

ஆ: மிஸ் காளி சவாலே சமாளி படம் பார்த்தி ருக்கியா? -