பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; - 151

இட்லர் :

பெண் :

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

இப்போதெல்லாம் பெண்களைக் கண்டு ஆண் கள் விலகிப்போனால், அந்த ஆண்களைக் கண்ட பெண்கள், ஆப்ரிக்க நாட்டு ஹிப்போ பொடமஸ் எருமைகளைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். இன்றைய நியதிப்படி பெண்ணும், ஆணும், எருமைப் பால் காபியையே குடிப்பதால், இரு வரும் ஒருவரைப் பார்த்து இன்னொருவர் விலக மாட்டார்கள். விலகக் கூடாது. இது பால் உரிமை! விலக முடியாது.

வெல்செட் கேளுங்கள். கேளுங்கள்.

மேலும் பெண் மாணவிகளைப் பார்த்து சிரித்தோமென்று அபராதம் போடுகிறார் பிரின்ஸ்பால்! மனிதனுக்குத்தான் கடவுளின் படைப்புகளிலேயே சிரிக்கத் தெரியும் என்பது மாபெரும் அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். ஆனால், அந்தச் சிரிப்புக்கு இங்கே தடை! இளமையின் எழுச்சிக்கு எதிர்ப்பு என்ன நினைத்துக் கொண்டார் கல்லூரித் தலைவர்? சகிக்க முடியாத கோரம்; வயதானவர், வாலிபத் துக்குத் தரும் தூக்குத் தண்டனை, பெண் மாணவிகளைப் பார்த்து, ஆண் மாணவர்கள் ஒப்பாரி வைத்து அழவேண்டுமென்று நினைக்கி றாரா தலைவர்? தர்க்க ரீதியாகக் கேட்கிறோம்! தருவாரா பதில்?

ஐயோ - ஐயோ - ஐடியா மன்னன் - அறிவு மழை, அய்யோ! கை தட்டுங்கள், கரவொலி எலுப்புங் கள். கையைப் படைத்தவர்களே! கையைத் தட்டுங்கள். வாயிருப்பவர்களே, விசில் அடியுங் கள்! இன்னா பேச்சு இன்னா பேச்சு! பேச்சுன்னா இதுன்னா பேச்சு.

சரி. இனி நீ பேசு - மூச்சு வாங்குது ஆ - சோடா! வெறும் சோடா கூடவா இல்லை? ஆகா