பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

t it curi :

111. (5)

சிரிப்பதிகாரம்

எதிர்க்காதே! நாங்கள் புயல்! பூகம்பம்! நீ ஒரு புதிய பூஞ்செடி, உஸ் என்று ஊதிவிடுவோம்.

உஸ். பேசாதே நீ ஒரு பைத்தியம்! கோயில் பெருச்சாளி! நல்லவர்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். எரி நட்சத்திரங்கள் வானத்திலிருந்து வீழ்கின்றன என்பதற்காக, சூரியனும் சந்திரனும் வீழ்ந்துவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நரிகளுக்கும், நாய்களுக்கும் பயந்து நல்லதொரு நாதக்குயில் ஒடிவிட வேண்டுமென விரும்புகிறீர் களா! ஊளையிடும் ஓநாய்கள் ஒளியை விரும் பாத ஆந்தைகள் - இவைகளுக்காக உதயசூரியன் உதிக்காமலிருக்க வேண்டுமென்கிறார்கள் இந்தப் புதிய உபதேசிகள்! அம்மாவுக்கு வயதாகி விட்டால் அம்மாவைப் பழமை என்று மறக்கச் சொல்லுகிறார்கள் இந்த அதிகப் பிரசங்கிகள். பட்டமரத்தை வெட்டினால் பழ மரங்களையும் வெட்ட வேண்டுமென்று தெளிவுரை தரும் கிறுக்குவாதிகள்! நீங்களே சொல்லுங்கள் நாம் இங்கே வந்தது அறிவை வளர்த்துக் கொண்டு எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவதற் காகவா? அல்லது நாச வேலைகளில் எல்லாம் ஈடுபட்டுக் கல்வி நிலையத்தை களங்கப் படுத்துவ தற்காகவா? பொன்னெடுக்க வந்தோம். பூநாகம் பிடிக்கச் சொல்லுகிறார்கள். சந்தனத்திற்குப் பதிலாக சேற்றையா எடுத்துப் பூசுவது? மூடத் தனத்தினால் மொட்டைத் தலையர்கள், முடி மன்னர்கள் ஆக முடியாது. பெட்ரோலில் குளிப்பதால் உடல் களைப்பு தீர்ந்துவிடாது. தலை நரைத்து விட்டது என்பதற்காக தார் எண்ணெயைப் பூசுவது முட்டாள்தனம்.

தலைமுடிக்கும் - தார் எண்ணைக்கும் 67676T சம்பந்தம் ஊசிப்போன உவமை ஒய்ந்துபோன பழமை; நான் சொன்னபடி கேளுங்கள். உம்