பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; 155

பட்டு

இட்லர் :

கத்துங்கள்! கல்லூரி வேண்டாம். காதலே வேண்டும். உம் ஏந்துங்கள் புரட்சிக் கொடிகளை மானமுள்ள மலர்க்கொடிகளே! உம் புறப்படு. மாணவ சுயாட்சி வேண்டும்.

பார்த்தீர்களா இந்த இட்லர் உங்களுக்குத் தீராத இன்னல் தர எண்ணுகிறார். வகுப்புக்குப் போக வேண்டாமென்று வீர முழக்கம் செய்கிறார். தான் கெட்ட குரங்கு வனத்தையே கெடுத்த கதையைப் போல, தங்களுக்கு வரும் கஷ்ட

நஷ்டங்களுக்கெல்லாம் ஈடு கொடுத்துக்

கொண்டு வயிற்றை ஒடுக்கி வசதிகளைச் சுருக்கி நம்மைப் பெற்றவர்கள் அனுப்பிய பணத்தை எல்லாம் சிங்காரச் சிந்து விளையாடித் தொலைத்துவிட்ட புத்திமான், உங்களை தனக்காக போராடச் சொல்லுகிறார். குளத்திலே உள்ள பாசிக்காக தாமரைக் கொடியைப் பிடுங்கி எறியுங்கள் என்கிறார். இதுதான் புரட்சியா? நல்ல நம் நாட்டிலே நாச வேலைகள் பெருகி விட்டன. அறிவுப் பீடத்திலே அக்ரமங்கள் குவிந்து விட்டன. ஆசிரியர்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று மாணவர்கள் சட்டமியற்றும் புதிய ஜனநாயகம் தோன்றி இருக்கிறது. ஆகா! குலத்தைக் கெடுக்கிறது கோடாரிக் காம்பு! நம் கையே நம் கண்ணைக் குத்துகிறது. அடே! ஐந்தாம் படையே? ஏடி எட்டப்பன் வாரிசே! காட்டிக் கொடுக்கும் கருங்காலியே! ஸ்ட்ரைக் எமது பிறப்புரிமை. அதை மறுப்பதோ உன் பெருமை! பொறுப்பது இனி அருமை! நீ பேசுவது சிறுமை! உன் அறிவிலே வறுமை! தோலர்களே! வாருங்கள் வரிசையற்ற ஆசிரியர் களை வலிமையாக எதிர்ப்போம்.

நில்லுங்கள். யார் யாரை எதிர்ப்பது? நமது

முகத்தை நமக்குக் காட்டும் கண்ணாடியை