பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; 159

இட்லர் :

பட்லர் :

மன்னா! முன் வைத்த காலைப் பின் வைக்காதே. இதோ அமிழ்தாஞ்சனம் எடுத்துக்கொள் - தலைவலி நிலையற்றது - தலைமை என்றும் நிலைத்திருப்பது, கேவலம், நிச்சயமற்ற தலை வலிக்காக, நிரந்தரமான தலைமைப் பதவியை விட்டு விடாதே - மோட்சம் வரும் சமயத்தில் தான் கடவுள் ரொம்ப சோதிப்பான் என்பான் புராணிகள். அதுபோல தலையைத் தந்து, இயற்கை உன்னை சோதிக்கிறது அஞ்சாதே, அதோ பார் மற்றொரு ஆட்டுமந்தை. இன்னும் பேசுவோம் - அவர்கள் மனதைக் கரைப்போம். மக்கள் - நெல்லிக்காய் மூட்டைகள் - தம்பி வா - செம்மறியாட்டு மந்தைகள் வா. ஆமாம். பாறையிலே கொட்டிய பாதரசத் துளிகள், பாலைவனத்திலே கொட்டிய பால். வா கிராமத்துக்குப் போகலாம். தோழனே தோல்வி கண்டு துவளாதே! அதோ பார் வெற்றி என்ற வீரக்காதலி வரவேற்க வருகிறாள் நம்மை!

(காசி முடிவு)