பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிரிக்காதவர் மாநாடு!

சுதந்திரம் பெற்று முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இனியாவது ஒவ்வொருவரும் சுதந்திரத்தைப் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியது கடமையாகும்.

எதற்காக விடுதலை பெற்றோம்? மக்கள் எல்லோரும் கவலையை மறந்து, கடமையைச் செய்து, களிப்பாக வாழ்வதற்காகத்தான் உரிமை பெற்றோம். முடிந்தவரை உழைப்பது, நியாயமான தேவைக்கு மீறியதைத் தேவை யுள்ளவர்க்குத் தருவது, வீட்டுக்கும் நாட்டுக்கும் உண்மையாக நடப்பது, அழுகையை விட்டு ஆனந்தமாக வாழ்வது, சிடு மூஞ்சித்தனத்தை விட்டுச் சிரிப்போடு இருப்பது, பகையை மறந்து புன்னகையோடு பேசுவது, இன்ன பிற நன்மைகளைப் பெறத்தான் நாம் உரிமையைப் பெற்றோம், என்பது திருவாளர் சிரிப்பானந்தரின் திடமான கருத்து. ஆனால் அவருடைய கருத்தை அவ்வளவு எளிதாக உலகம் ஒப்புக் கொள்வதாக இல்லை.

சிரிப்பு என்பது ஒருவகை நரம்பு நோய்! சிரிப்பு என்பது சோம்பலில் விளைந்த ஒருவித அபாயகரமான வலிப்பு! சிரிப்பு என்பது ஒரு ஆடம்பரப் பொருள்! - என்பது ஒரு பிரபல ஆராய்ச்சியாளரின் முடிவு.

அவர்தான் உலகமறிந்த உயர்திருவாளர் சர்வ ஸ்ரீ வெறுப்பானந்த வேந்தர் என்பவர்!

இந்த வீரத்திரு வெறுப்பானந்தரைப் பற்றி வாசக நேயர்கள் எளிமையாகக் கருதக் கூடாது. உலகமெங்கும் புகழ் பெற்றவர் இவர்! இவரைப் போற்றாத நாடு இல்லை, மொழி இல்லை, இனமில்லை! புகழாத படிப்பாளிகள் இல்லை!

இவருடைய மகத்துவம் மகா பெரியது! ஜகமெங்கும் புகழ்தாங்கி நிற்கும் செல்வாக்குப் பெற்றவர் ஸ்ரீமான் வெறுப்பானந்தஜி அவர்கள்! இவ்வளவு எதற்காக? இன்றைய