பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

171


ஜனநாயக யுகத்தில் ஒட்டு எடுத்துப் பார்த்தால் ஏராளமான ஒட்டுகளால் எளிதில் வெற்றிபெறும் பாக்கியசாலி - இந்த வெறுப்பானந்தர் தான் என்பதால் கொஞ்சங்கூட சந்தேக மில்லை.

சுதந்திர தினத்தில் சிவத்திரு. சிரிப்பானந்தர் செம்மல் அவர்களைக் கொண்டு ஒரு நகைச்சுவை மாநாடு நடத்தி விடுதலை நாளைக் கொண்டாட வேண்டும் என்பது பூர்மான் பொதுஜனத்தின் ஏற்பாடு. அதற்காக பெரிய பெரிய சுவரொட்டிகளில் விளம்பரமும் செய்து விட்டார். - இந்த விளம்பரத்தைக் கண்ட வெறுப்பானந்தரின் உள்ளம் கருப்பாகிவிட்டது. ‘மனித குலத்தின், மகத்தான சத்துருவான அந்தச் சிரிப்பு கெட்ட கேட்டுக்கு ஒரு மகா நாடாவது. அதிலும் சிந்தனைமிக்க செந்தமிழ் நாட்டில் சிரிப்புக்கு ஒரு சிறப்பு மாநாடு கூட்டுவதா? அதிலும் எனது பரம எதிரி சிரிப்பானந்தன் தலைமை தாங்குவதா? அதுவும் பட்டிமண்டபத்திலா? கூடாது! நடக்காது! இந்த சிரிப்பைக் கொண்டு இந்தப் போலிச் சுதந்திரத்தைப் பெரிதாக்கப் பார்க்கும் இந்த பயங்கரமான சூழ்ச்சியை சுட்டுப் பொசுக்கியே தீரவேண்டும்” என்று தீர்மானம் செய்து விட்டார்.

அது மாத்திரமா? திருவாளர் வெறுப்பானந்தர் சிவத்திரு சிரிப்பானந்தருக்கு விடும் சவால் - ‘அறிவின் திறமிருந்தால், என்னை வாதப் போரில் வெல்லட்டும். அதன் பிறகு சிரிப்பு என்ற நரகத்தில் அவரும் அவரைப் பின்பற்றுபவரும் போய் விழட்டும்’ என்று சகல பத்திரிகைகளிலும் முதற் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு விட்டார். ஆமாம். அன்று தினசரியில் வழக்கமாக எட்டுக் கால முக்கியத்துவம் பெறும் கொலைச் செய்திகளும் - கலைப் பகுதிகளும் இரண்டு காலத்தில் இளைத்து விட்டன. இந்த வெறுப்பானந்தரின் சவாலுக்கே முக்கிய இடம் காரணம், பத்திரிகைகளுக்கெல்லாம் இந்த வெறுப்பானந்தரிடம் ஏகப்பட்ட அச்சம்!

சுதந்திர தினத்தை சும்மா வெறும் சடங்காக நடத்துவதைவிட, கொஞ்சம் சத்துள்ளதாக, சாரமுள்ளதாக, முடியு-