பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

சிரிப்பதிகாரம்


மானால் காரசாரமாகவே நடத்த வேண்டும் என்று திட்ட மிட்டிருந்த திருவாளர் பொதுஜனத்துக்கு இந்த வெறுப் பானந்தரின் சவால் சமயத்தில் வாய்த்ததொரு சஞ்சீவியாக வந்து சேர்ந்தது!

வெறுப்பானந்தரின் சவாலை சிரிப்டானந்தரும் ஏற்றுக் கொண்டார். பட்டிமண்டபமும் ஒப்புக் கொண்டது.

வேடிக்கையாக வந்த இந்த வாய்ப்பு ஒரு சிறந்த உரைக்கோவை மாநாடாகவே உருவெடுத்து விட்டது!

மாநாட்டில் சிவத்திரு சிரிப்பானந்தரும், வீரத்திரு வெறுப்பானந்தரும் விவாதம் நடத்துவதை நடுநிலை நின்று தீர்ப்புக் கூற செகத்திரு சிந்தனையானந்தரை தலைமை ஏற்கும்படி, ஸ்ரீமான் பொதுஜனம் கேட்டுக் கொண்டார். அவரும் ஒப்புதல் தந்துவிட்டார்.

மாநாடு நடந்தது. அதில் நடந்த வாதக் கோவையை அப்படியே எழுதி உங்களுக்கு அனுப்பி விட்டோம்.

காரணம், உயர்திரு பொதுஜனத்தைக் கடந்த முப்ப தாண்டு காலமாக, அகமும் முகமும் மலரும்படி, ஆனந்தச் சிரிப்பில் ஆழ்த்திய குற்றம், தவத்திரு உங்களைத்தான் சாரும் என்பது, வெறுப்பானந்தரின் ஆணித்தரமான வாதம்!

இந்த வாதத்தின் ஆணித்தரமான முடிவை தவத் திருவான நீங்கள் அறிய வேண்டுமென்பது பெருந்திரு பொதுஜனத்தின் விருப்பம்.

அத்தோடு கடந்த முப்பதாண்டு காலமாக உம்முடன் நெருங்கிப் பழகும் நேயர்களுக்கும் இந்த வாதத்தின் விவரம் தெரிந்திருக்க வேண்டும் என்று அந்த மாநாட்டின் வாதக் கோவையை பட்டிமன்றத்தின் பேச்சுக்களை அப்படியே தருகிறோம்:

பட்டிமன்றம் பத்து மணிக்கென விளம்பரம் செய்யப் பட்டும் எட்டு மணிக்கே மண்டபம் நிறைந்து விட்டது.

சரியாக மணி பத்து அடித்தது!