பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிரிப்பதிகாரம்

174

வெறுப்பு : வெறுப்புமிக்க தோழர்காள் தோழியர்காள்!

உங்கள் சார்பில் நடுவருக்கு ஒன்று நவிலு வேன்! அதாவது எந்த ஒரு சிரிப்பு என்ற பகையைச் சாட இங்கே கூடியுள்ளோமோ அந்தச் சிரிப்பு எனும் மோகினி வலையில் எனதருமை வெறுப்பாளர்கள் வீழ்ந்து கலங்கும்படியான சூழ்ச்சி இந்தப் பட்டி மண்டபத்திலே நடைபெறுகிறது. இதனை நடுவராய் வந்துள்ள சிந்தனையானந்தர் தமது சிவந்த விழிகளால் கண்டு தக்க பரிகாரம் செய்யக் கடவர்.

சிந்தனை பேசுகிறார்: அய்யன்மீர் அருள்கூர்ந்து சிரிக்காதீர்

வெறு

கள். சிரிக்காமல் இருந்தால்தான் இந்தப் பட்டி மன்றம் நடுவு நிலையுடன் நடைபெறும். யான் நடுநிலையாளன். சிரிப்புக்கும் வெறுப்புக்கும் இடையே நேரும் மன அரிப்புக்கு அடிமை யாதல் தகாது! நீங்கள் அவ்வண்ணம் இருக்க வேண்டுமேயானால் உடனே சிந்தனையாள ராக மாறுங்கள். வாழ்க சிந்தனை உங்கள் முகங்களை உம் என்று வைத்துக் கொள்க. இப்போது சிவத்திரு சிரிப்பானந்தர் தமது சீருரையால் பட்டிமன்ற விவாதத்தைத் துவக்குவார்!

(மீண்டும் வெடுக்கென விம்மி எழுத்தார் வெறுப்பானந்தர்)

குறுக்கே ஒரு வார்த்தை. இந்தப் பட்டிமன்ற

மாநாடே. இந்த ஆண்டில் முதல் நிகழ்ச்சி. ஆதலால் முதலில் இறந்து போனவருக்கு அனுதாபத் தீர்மானம் போட்ட பிறகு தான் நிகழ்ச்சி துவங்க வேண்டும் என்று வேம்பின் கசப்போடும், கடுவம் பூனை வெறுப்போடும் அபசகுனமாகக் காட்சி தந்தார். தேவேந்திரன்