பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

கூட்டம்

வெறுப்பு

கூட்டம்

சிரிப்பதிகாரம்
சரி. பலர் உளர் எனில் பெயரைப் பகர

லாமே!

நினைவில்லை!

சரி. நினைவு வந்தபின் உங்க அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றலாம். இப்போது பட்டிமன்ற மாநாடு துவங்கட்டும். பேசட்டும்! சிரிப் பானந்தர் சீருரை ஆற்றட்டும்.

தவத்திரு சிரிப்பானந்தரின் சீருரை : நடுநிலை தாங்கும்

சிந்தனையாளர் அவர்களே! சிரிப்பை வெறுக் கும் வீரத்திரு வெறுப்பானந்தர் அவர்களே! சிரிப்போடும், மானத்தோடும், மகிழ்வோடும்,

செழிப்போடும் மனை மக்களோடும் வாழப்

பிறந்துள்ள அருமைத் தமிழ்ப் பெரியோர் களே! உங்களுக்கு எனது வணக்கம். சுதந்திரம் பெற்று 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு முன் இருபது ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரத்தை வரவேற்று, நமது மகாகவி பாடினார். ஆடினார். ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே - ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே! இதில் ஆனந்தம் என்ற வார்த்தையின் பொருளின் புறத்தோற்றந்தான் சிரிப்பு எனப்படும் சீரிய செல்வம். பயிரின் வளர்ச்சி உணவாகிறது! கொடியின் மலர்ச்சி மலராகிறது. மகிழ்வின் மலர்ச்சியே சிரிப்பாகிறது. செழிப்பின் மணமே சிரிப்பு. பண்பின் பண்பே சிரிப்பு. நெஞ்சின் நிறைவே சிரிப்பு. நினைவின் சுவையே சிரிப்பு.

பெரியோர்களே இத்தகைய சிரிப்பைக் காரண மின்றி வெறுப்பவரும் உலகில் இருக்கிறார்கள் என்றால் அது இந்த உலகின் குறையேயன்றி, சிரிப்பின் குற்றமன்று - -