பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

வெறுப்பு

கூட்டம்

கூட்டம்

வெறுப்பு

சிரிப்பதிகாரம்

ஆம் சிரிக்காதது தேசத் துரோகம், ஆம், தேசத் துரோகி வெறுப்பானந்தர் வீழ்க, வெறுப் பானந்தர் வீழ்க

சிரிக்காத வாய்க்குப் பல் எதற்கு.? மகாத்மா கூட சிரிக்க வேண்டுமென்றுதான் கறி யிருக்கிறார்.

நான் மகாத்மாவை வெறுப்பவன், அந்த

மனுசன் செய்த விபரீதத்தால் வந்த வினை தான் விடுதலை. இந்த விடுதலையில்லாமலி ருந்தால் இந்த நாடு வெள்ளைக்காரன் தலைமையில் நன்றாக வாழ்ந்திருக்கும்.

ஒய், திசை திருப்பாதீர். அடிகளாரே!

சிரிப்பைப் பற்றிப் பேசும். அரசியலைப் பற்றிப் பேச நீர் யார்?

ஒய் வெறுப்பானந்தரே! பட்டிமண்டப

வாதத்தில் நீர் தோற்றுவிட்டீர்! ஆகவே நீர் சிரித்தே ஆகவேண்டும். இல்லையேல் விட மாட்டோம். பலாத்காரமாகச் சிரிக்க வைப் போம். நீர் சிரிக்கும் வரை நீர் நூறு மைசூர் பாகுகளை, ஆயிரம் ஜிலேபிகளைத் தின்றாக வேண்டும். என்ன சொல்லுகிறீர், சிரிக்கப் போகிறீரா? ஜாங்கிரி தின்று சித்ரவதைக்கு ஆளாகப் போகிறீரா? மைசூர்பாகு தின்று மடியப் போகிறீரா?

அடப் பகுத்தறிவற்றவர்களே! பலாத்காரக்

கூட்டமே! உங்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறது. (என்று ஓங்கிச் சிரிக்கிறார் - டைத்தியக்கார னைப் போல, அடுத்த கணம் அவர் கட்டி யிருந்த போலிப் பல் வரிசை எங்கோ போய் கூட்டத்தின் நடுவில் விழுந்து விடுகிறது?