பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் :

கூட்டம்

வெறுப்பு

ஒருவர்

187

ஆ! வெற்றி கடைசியாக வெறுப்பானந்தர்

சிரிப்பின் பெருமையை ஒப்புக் கொண்டார். சிரிப்பே வென்றது. சிரித்து விட்டார்! சிரித்தே விட்டார்!

ஆ எனது பல் வரிசை எங்கே? ஆயிரம் ரூபாய்

செலவு செய்து கட்டிய பல் வரிசை. ஐயகோ? எங்கே என் பல்? எங்கே என் சொல்? அந்த ராமனுக்கு வில்? எனக்குப் பல் தானே எல்லாம்? எங்கே எனது பல்?

ஒய்! சிரிக்காத வாய்க்குப் பல் எதற்கு?

பட்டிமன்றத் தலைவர் முடிவுரை : அவையோர்களே!

அமைதி சிரிப்பு வென்றது. மனிதனுக்கு மட்டு மல்ல. மற்றுமுள்ள ஜீவராசிகளுக்கும் சிரிக்கத் தெரியும். நன்கு கவனியுங்கள்! தெரியும்.

நாய்தனது சிரிப்பைத்தன் வாலில் காட்டும் நரி, தனது தீங்குரலில் நகைத்துக்காட்டும்! நல்மாடு காதுகளை மடித்துக் காட்டும்! நற்குதிரை சிரிப்பதனைக் கனைத்துக் காட்டும்! நண்டுசிப்பி மீன்வெயிலில் நகைத்துக்காட்டும்! நாமென்ன இதைவிடவா கெட்டுப்போனோம்! நாளைமுதல் சிறிதேனும் முயற்சி செய்வோம், நாளாக நாளாக நாம் சிரிப்போம்! செயலில் இதைக்காட்டியவர் காந்தி அண்ணல், சுட்டுவிட்டான் அக்கணமும் சிரித்திருந்தார்! சிரிக்காத பேருக்கு பல்லெதற்கு? கொடுக்காத கஞ்சர்க்குக் கையெதற்கு? குதிக்காத குரங்குக்குக் கொம்பெதற்கு? கொத்தாத கிளிகட்குப் பழமெதற்கு? அச்சத்தைத் தீர்க்காத அரசெதற்கு? அறிந்துபணி செய்யாத அமைச்செதற்கு? கொஞ்சாத மலடிக்குக் குழந்தை வேண்டாம்! கொள்கையே இல்லார்க்குக் கொடி எதற்கு?