இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எஸ்.டி. சுந்தரம்
17
- முடியாது கண்ணே! நீ பொங்கி வரும் காவேரி -
- நான் மேட்டூர் டாம். எந்த டேம், நான்சென்ஸும் நம்மைப் பிரிக்க முடியாது.
ராணி : சரி போதும். அந்த சோகரசப் பாட்டையும்
- பாடித் தொலைத்துவிடு. அதுதான் உன் பாத்திரத்துக்கு
- முக்யமான சீன். உம்.... எங்கே தாடி....
- தாடியைக் கட்டிக் கொண்டே பாடினாத்தான்
- உனக்கு மேடையிலே சுலபமாயிருக்கும். உம்... நடி
- கண்ணே நடி! உலகமே ஒரு நடிப்பு மேடை.
பேபி : இதோ.. எல்லாம் ரெடியாயிருக்குது கண்ணே!
- (மேஜை மீதிருந்த தாடியை எடுத்துக் கட்டிக் கொள்ளுதல்)
பாட்டு
உருகுதடி தாரகைகள் வானிடிந்து நடுங்குதடி
எரியுதே உலகமெல்லாம் - இனி நான்
போவது மெங்கே வழி எங்கே
பறந்து செல்லும் பைங்கிளியே மறதியாகுமா?
இது நீதியாகுமா?
விதி எதிர்த்து அழித்தாலும் உடல் புகைந்து போனாலும்
எழுகடல் எரிந்தாலும் உன் நினைவினிமாறாதே என் ஜீவனே
- (ஒரே சோகமான இருகுரல் பாட்டைப் பாடுகிறார்கள். மேடையில் உள்ளிருந்தே வேலைக்காரன் சாமி கதவைத் தட்டுகிறான்)
சாமி : பேபி... பேபி... பேபி... கதவைத் திறப்பா! பேபி...
- பேபி...
பேபி : கடங்காரன் எவனோ இப்ப வந்துட்டானே.
- பாலிலே உப்பு போட்ட மாதிரி... சரி, ராணி
- கொஞ்ச நேரம் அப்படிப் போய் மறைந்திரு.
- பிறகு நாடகத்தைத் தொடரலாம்.
(கதவைத் திறக்கிறான்)
(சாமி உள்ளே வருகிறான் )