பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படம் முடியாது
இனித் துயரம்...


காலை நேரத்தை வரவேற்க, வழக்கப்படி கடற்கரைக்குப் போனேன். முருகக் கடவுளின் கருணைக்குரிய நீலமயில் போன்ற அடிவானத்தில், அருணோதயத்தின் கதிர்த் தோகைகள் வானெங்கும் நீண்டு பரவி, நீலவிதானத்திலே கோலம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தன. சூரிய நமஸ்காரம் செய்ய ஆயத்தமானேன்.


அப்போது சிறிது தூரத்தில் ஒரு படகின் பக்கத்திலிருந்து ஏதோ முனகல் சப்தம் கேட்டது. என்னடா இது, காலையில் எவனோ ஒருவன் சலித்துக் கொள்கிறானே! என்ன சங்கடமோ, பார்ப்போம்! என்றெண்ணிப் படகின் பக்கமாகச் சென்றேன். அங்கே ஒரு மனிதர் உட்கார்ந்திருந்தார். படம் முடியாது இனித் துயரம் படமுடியாதரசே, பட்டதெல்லாம் பட்டணத்தில் பட்டதெல்லாம் முடியாதரசே' என்று திருவருட்பாவை கொஞ்சம் மாற்றியும் மழுப்பியும் தம் செளகரியப்படி பாடிக் கொண்டிருந்தார். ஒ! இவர் ஒரு அரைகுறை அருட்பா பக்தர் போலிருக்கிறது. வள்ளலாரின் ரசிகர் போலிருக்கிறது என்று எண்ணி, அருகில் போய்ப் பார்த்தேன். அதே படம் முடியாது, என்று பல்லவியைப் பாடினார். “ஐயோ! நீர் யார்?” என்று கேட்டேன்.


அவர் கொஞ்சம் கூடத் தயங்காமல், “நான் ஒரு படுபாவி சார்!’ என்றார்.


‘என்ன ஐயா இது உம்மை நீயே கோபித்துக் கொள்ளுகிறீரே! என்ன விஷயம்? ஏனிப்படி தனிமையில் உட்கார்ந்திருக்கிறீர்” என்று கேட்டேன்.


அவர் ஒருமுறை கனைத்துக் கொண்டு, “எவன் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொள்கிறானோ, அவன்தான்