பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

சிரிப்பதிகாரம்



பணம் போனால் போகட்டும். உம் குறையை உணர்ந்த உமது உயிர், இனி மறுமலர்ச்சியுடன் விளங்கும். நீர் கண்ட அனுபவத்தால் புது வாழ்வு மலரும், ஆனால் ஒன்று, நானும் ஒரு எழுத்தாளன் - என்னையும் கொன்று விடாதீர்” என்று கூறி அவரை அழைத்துச் சென்றேன்.

வாழ்வின் துவக்கத்தைக் காணப் புறப்படும் ஐந்து வயதுப் பாலகனைப் போல் அந்தச் சோணாசலம் என்னுடன் புறப்பட்டார்.

அன்றைய உலகைத் துவக்கி வைத்த சூரியன் தங்கத் தடாகத்தில் குளித்து, வைரப்பந்தாக உருண்டு, வானிலே எவ்வி எல்லையிலா ஒளிக்கடலில் நீந்திக் கொண்டிருந்தான்.

முற்றும்