பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

23



மெதுவாகத் திருடித் திருடி 2 லட்சம் ரூபாய்
சேர்த்து விடுகிறேன். பிறகு நாம் இருவரும்
காஷ்மீர், சைனா, ஜப்பான் எங்காவது பறந்து
விடலாம். மனிதன் ஆகாய விமானத்தைக் கண்டு
பிடித்ததே நமக்காகத்தான் ராணி,

ராணி : (அழுது கொண்டு) கேவலம் ஏழைப் பாடகி

தானே என்று எண்ணி என்னைக் கைவிட்டுவிட மாட்டாயே பேபி!

பேபி : ஆகா! இந்த உலகம் புரண்டாலும் சரி, இந்து

மகா சமுத்திரம் காய்ந்தாலும் சரி, இமயமலை
வெடித்தாலும் சரி, இன்றைய இந்தியா இருபதானாலும்
சரி, இந்த பேபி இந்த ராணியை கைவிடமாட்டான்
கண்னே! நம்பு என்னை! இது தேர்தல் வாக்குறுதியல்ல!
தெளிவான காதலின் தெய்விகக் குரல்!

ராணி : உன் அப்பா பார்க்கணும்னு சொன்ன பெண் யார்?

பேபி : அந்த வாணிதான் ராணி!

ராணி : யார் வாணியா! எனக்கு ரொம்பத் தெரியுமே!

பேபி : ஐயோ! பெண்ண அவள். அவளைப் பார்த்தாலே

எனக்கு பயமாயிருக்கிறது. அவளையாவது நான்
கல்யாணம் செய்து கொள்வதாவது! ராணி
நீ வருந்தாதே, நான் பி.ஏ. பாஸ் பண்ணினால்
தானே வாணியை அவள் தாத்தா எனக்குக்
கொடுக்கச் சம்மதிப்பார். நான் பாஸ் பண்ணப்
போவதுமில்லை. வாணி என்னைக் கலியாணம்
செய்துகொள்ளப் போவதுமில்லை.

ராணி : இந்த வருஷம் பரீட்சை எழுதியிருக்கிறாயே!

பேபி : உம், என்னமோ எழுதியிருக்கேன். அப்பா திட்டுவாரேன்னு

பரீட்சைக்குப் போனேன். எல்லாப் பேப்பர்லேயும்
நிச்சயம் சைபர் மார்க்தான்.