பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

25


காட்சி – 2

இடம் : மகேஸ்வர பூபதி, வாணியின் வீடு.
காலம் : பகல்
(சாமி, பேபி, பூபதி வருகிறார்கள். மகேஸ்வர பூபதி எதிர் கொண்டு அழைக்கிறார்)

மகேஸ்வர பூ: வாங்க, வாங்க பூபதி! வாப்பா பேபி

வா. உட்காருங்க பூபதி. உட்காரப்பா பேபி
உட்காரு.

பூபதி : நம்ம பேபி ரொம்ப கூச்சப்பட்டவன். வரவே

மாட்டேன்னு பிடிவாதம் புடிச்சும் நான்
கொண்டு வந்துட்டேன். பெரியவர்களைக்
கண்டால், ரொம்ப பயபக்தியோட நடந்து
கொள்வான். உட்கார்ரா பேபி. நம்ம தாத்தா -
‘சும்மா உட்கார்’

பேபி : Yes, தாத்தா, I am shy fellow - பயம் பக்தி -

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம்
உள்ளவன். அது பெண்களுக்கு மட்டுந்தான்
சொந்தமா? ஆண்களுக்கும் வேண்டும் என்பதில்
அசையாத நம்பிக்கையுள்ளவன். நான் நல்லவன்.
நாடறிந்தவன். நற்கலைஞன் - நாளைய கவிஞன்!

ம.பூ : சரி! உட்காரப்பா. அம்மா வாணி...

(பேபி பயந்து உட்காருகிறாள்)

ம.பூ : வாணி! வாம்மா.

வாணி : ஏன் தாத்தா.

ம.பூ : பார், மாமா வந்திருக்கார். பேபி வந்திருக்கு.

வாணி : ஓ! மாமாவா! வணக்கம் மாமா! யாரது - பேபி

கூட வந்திருக்கா - என்னப்பா பபூன் பேபி