இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28
சிரிப்பதிகாரம்
- சே, சே, ரொம்ப மோசம் தாத்தா,, வரவர
- எஜுகேஷன் ரொம்ப ஹோப்லஸ் - கல்வி! ஒரு
- கண்றாவி! இந்த பரீட்சை என்ற பிசாசு ஒழிந்தால்
- தான் பாஸ் பண்ண முடியும் போலிருக்கு தாத்தா.
- உண்மையாச் சொல்லப் போனா இந்த பாழும்
- பரீட்சை ஒழிந்தால்தான் நமது பாரதநாடு
- உருப்படும், வாட் யூ சே வாணி?
வாணி : எப்படித் தாத்தா பேபியின் பிரசங்கம்?
ம.பூ : ஒகோ! பரீட்சையின் எதிரிகளில் நீயும் ஒரு
- ஆளா தம்பி!
பேபி : ஆமாம் தாத்தா! என்னைப்போல் புத்திசாலிகளெல்லாம்
- கூட பெயில் ஆகறதுக்கு, இந்த
- பரீட்சை தானே காரணம். ஆகையால் அது
- ஒழிக! நான் வாழ்க! பரீட்சை எதிர்ப்பு இயக்கத்திற்கு
- நான்தான் தாத்தா தலைவன். தாத்தா,
- உண்மையாகச் சொன்னா. சீனாவும் அமெரிக்காவும்
- ஒத்துப் போனாலும் போகலாம். ஆனால்
- மாணவர்களும் பரீட்சையும் ஒருக்காலும் ஒத்துப்
- போகவே முடியாது. இது சத்தியம்.
ம.பூ : பேஷ்... பேஷ்... பேபிக்கு பேசத் தெரியாது
- என்கிறீர்களே பூபதி - பெரிய ஆள் போல
- இருக்கே எழவு அரசியல் வியாதிபோல உளறித்
- தள்ளுறானே?
வாணி : ஆமாம் தாத்தா இந்த அரசியல் அதிசயத்தை
- ஆப்பிரிக்காவுக்குத்தான் அனுப்பணும்.
பேபி : வாணி புத்திசாலி! பாருங்க தாத்தா! பரீட்சை
- ஒரு தொத்து வியாதி, காலேஜ் ஒரு டி.பி.
- ஆஸ்பிடல்
பூபதி : பேபி என்னடாயிது, பேசாமலிரு.
- அவன் அப்படித்தான் மாமா - தமாஷாப் பேசுவான்.
- எல்லாப் பேப்பரும் நல்லத்தான் எழுதியிருக்கான்
- கட்டாயம் பாஸ் பண்ணிவிடுவான்.