பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

பேபி

G

பூபதி

சிரிப்பதிகாரம்

என்னப்பா செய்வது? ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால், உங்களுக்குத் தெரியாதா அப்பா! சூர்ப்பணகையால் ராவணன் அழிய வில்லையா? ஒரு பெண்மணியால் பாரதப்போர் எழவில்லையா? சிம்சனால் எட்டாம் எட்வர்ட் ஏழையாகவில்லையா? சிங்காரிகள் விளம்பரத் தால் சோப்பின் விலை ஏறவில்லையா? பேஷன்

பெண்களால் நாங்கள் எல்லாம் பெயில் ஆக

வில்லையா. அந்த, அந்த அந்த சிவபெருமான். முட்டாள் என்னிடம் வேதாந்தமா பேசுகிறாய்? வேதாந்தமல்லப்பா - வாழ்க்கையின் சிக்கல்!

கட்டாயம் நீ வானியைக் கல்யாணம் செய்து கொள்ளத்தான் வேண்டும். இல்லையேல் செய்து

வைக்கப்படும்.

உங்களால் முடியாதப்பா!

என்னையா எதிர்த்துப் பேசுகிறாய்? என்னிடம் வேறெவனும் இப்படிப் பேசினது கிடையாது பேச முடியாது! நான் யார் தெரியுமா? எமன்! உன்னைச் சித்ரவதை செய்து விடுவேன்.

அப்பா! நான் பி.ஏ. பாஸ் பண்ணாத்தானே வாணியை எனக்குக் கொடுத்து சித்ரவதை செய்வீர்கள். நான்தான் இந்த வருஷமும் வெற்றி கரமாக வேண்டுமென்றே பெயில் ஆகப் போகிறேனே!

சீ. வாயை மூடு பெயில் ஆகப் போகிறாயா? டேய் பேபி! நீயா பெயில் ஆகப் போகிறாய்? உன்னால் பெயில் ஆக முடியுமா? இப்போதே காலேஜ் பிரின்ஸ்பாலை வரச்சொல்லி இருக் கிறேன். நீ பாஸ்ாகும்படி செய்கிறேன். போ, நீ மரியாதையாய் இரு பெயில் ஆகப்போகிறோமே என்று வருத்தப்படாதே. அதெல்லாம் நான் சரி செய்கிறேன் - போடா.