பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

21


காமெடியன் வந்து, அவரே எழுதிய ஒரே ஒரு ஜோக் அடித்தால், அந்த ஜோக்கின் அதிர்ச்சியிலே, காதல் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடுகிறது. காமெடியன் முன்னால் கதாநாயகனும் கதாநாயகியும், ஏன் வில்லனும்கூட, தேர்தலில் தோற்றுப்போன கட்சிகள் மாதிரி ஒளிந்து மறைந்து ஓடி ஒடுங்கிப் போவதை நாம் அடிக்கடியும் காணும் கண்றாவியல்லவா? அதற்குப் பின் அந்தக் காமெடியன் எவ்வளவு சேட்டை செய்தாலும், அவர்தான் நாடக உலகின் எவரஸ்ட் என்றெல்லாம் தீர்மானிக்கும் ரசிகர்கள் பெருத்த நாடு அல்லவா இது? காமெடியன் காதலை ஏன் முழுங்கி ஏப்பம் விடுகிறார்? அதைக் கண்டுபிடிக்க வேனுமானால் காதலைப் பற்றியும் கொஞ்சம் துப்பறிய வேண்டும்.

காதலில் நான்கு கட்டங்கள் உண்டு. முதல் கட்டம் உடலின் அழகாட்டம். அடுத்தது மயக்கத்தின் மன மூட்டம். அதற்கடுத்தது ஆத்மீகக் கண்ணோட்டம். நான்காவது இருமையற்ற ஒருமைநிலை, வேகம், சோகம், மோகமெல்லாம் கடந்ததொரு யோக நிலை.

நாலாவது நிலைக்குச் செல்பவர்கள் மிகமிகக் குறைவு. முதல் இரண்டு நிலைகளின் நிழல்கள்தான் நாம் சாதாரண மாகக் காணும் நாடகக் காதலர்களின் களியாட்டங்கள். பாசவலையா, பருவக்கோளாறா?

பாவம், அவர்கள் அகப்பட்டுக் கொண்டிருப்பதுவோ, மீளமுடியாத பாசவலைகள்! உடல் எழிலின் வளைவுகளை கண்களால் உண்ணும் சாதாரண ஹோட்டல் சாப்பாட்டில் மிளகாய்ப் பொடி ரசனை சுவை அல்லது மூக்குப் பொடியின் மிளகாய்ப் பொடி ரசனை! சுவை அல்லது மூக்குப் பொடியின் சுவாரஸ்யம்! இந்த காரப்பொடி காதல் பாத்திரங்களை ஏதோ வானில் எம்பிப் பாயும் சுதந்திர வானம்பாடிகள் என்று நினைத்துக்கொண்டு ரசிகர்கள் ஏமாறுகிறார்கள். காதலர்களும் எக்காளங்கொண்டு விளையாடுகிறார்கள். கீரியும் பாம்பும் போல் கட்டிப் புரளுகிறார்கள்! நேசமும் பாசமும் இருப்பதாக நடிக்கிறார்கள். எல்லாம் கீ (Key) கொடுத்த பொம்மைகளா என்ன? உள்ளங்