பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

53


அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டது மனம். காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஏதோ ஒரு கசப்பு. வெறுப்பு, அலர்ஜி. இரண்டு உயிர்கள் தத்தம் இடங்களை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை. கடைகளையும் மாற்றிக் கொள்ளும் ஒரு கடைமாற்று வியாபாரம்தான் காதல் என்று சொல்லும் அளவுக்குத்தான் இப்போதைய ஆராய்ச்சியின் முடிவு இருக்கிறது! மேலும் மாறலாம். யார் கண்டது! ஆராய்ச்சிக்கு முடிவுதான் இல்லையே!

இந்த வியாபாரத்தில் லாப - நஷ்டம், இன்ப - துன்பம், உறவு - பகை, வெப்பம் - குளிர்ச்சி, சிரிப்பு - வெறுப்பு, குணம் - குற்றம், பாசம் - பக்தி, அமைதி - புயல், பயம் - நயம், அன்பு - பண்பு எல்லாமே வரும் போகும். ஆக, இதுகள் எல்லாம் காதல் மார்க்கட்டின் வரவு - செலவுக் கணக்குகள். ஆனால், இந்த உணர்ச்சிகள் அனைத்திற்கும் மேலாக மேலாதிக்கம் செலுத்தி, கங்காணியாக இருப்பது நகைச்சுவை ஒன்றுதான் என்பதை மட்டும் நாம் மறக்க முடியாது. காதல் நாடகம் என்ற பேரில் நடத்தப்படும் சில நாடகங்களில் வரும் நகைச்சுவையைப்போல், ஆயிரம் தெனாலிராமன்கள் சேர்ந்தாலும், நூறு கோமாளிகள் வந்தாலும், நகைச்சுவையை நமக்குப் பரிமாற முடியாது! ஆக, நாம் கண்ட சில காதல் பாத்திரங்களில் மிஞ்சியிருக்கும் சுவை நகைச்சுவைதான் என்பது நமது அசைக்க முடியாத முடிவு. அக்காலத்தில் தீட்டப்பட்ட தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் முதல் இக்காலத்து இல்காப்பியல் நாயகிவரை, முதலிடம் தருவது நகைச்சுவைக்குத்தான்.

தொல்காப்பியமா?

ஆம், தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில், அதாவது நடிப்பியலில், குறிப்பிடும் எட்டுச் சபைகளில் நகையே அழுகை, எளிவரல், மருட்கை’ என்றுதான் துவங்குகிறார். ‘பகையே, காதல்’ பருவக்கனியே என்று துவங்கவில்லை.

இக்காலத்தில் நமது சகதர்மணியும், அதாவது இல்லத்தரசியும், நகையுடன்தான் (சிரிப்புடன்தான்) தனது நகைக் கோரிக்கைக்குரிய முதல் அப்ளிகேஷனைப் போடுகிறாள்.