பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

சிரிப்பதிகாரம்

சாம்பி :

சாது

சாம்பி :

சாது

ஆஹா நண்பா. இதோ பார்! இப்படி ஒரு

மணிமேகலை பிறப்பாள் என்று தெரிந்திருந்தால்,

நான் இந்த நகையில் உள்ள மரகதக் கல்லாகப் பிறந்திருப்பேன். அவள் மார்பிலே தவழ்ந்தி ருப்பேன். இந்த நகைகளை அவள் பார்த்தால்.

நகையைக் கண்டு மயங்கும் வகையைச் சேர்ந்த வனிதாமணி மேகலையல்ல நண்பா! அவள் ஒரு புலிக் குகை புதுப்பகை கனற்புகை!

முட்டாள்.! உனக்கென்ன தெரியும் ஆணுக்கு மண்ணாசை பெண்ணுக்குப் பொன்னாசை. நகையை விரும்பாத நங்கை, கிளையை விரும் பாத குரங்கு. உயிரில்லாத உடம்பு, உப்பில்லாத கடல் நீர், இதெல்லாம் உலகில் இருக்க முடியாது அப்பனே! மணிமேகலை என்ற பெயரே ஒரு நகையின் பெயர்தானே! தமிழைப், படியடா தம்பி! தத்துவம் தெரியும் காதல் மகத்துவம் புரியும்! - - -

அப்பனே! புத்திசாலி மணிமேகலை என்பது நம் நகரத்தெய்வத்தின் பெயர் தெரியுமா?

தெய்வம்! எங்கிருந்து வந்தது? சிற்பக் கலைஞன் கண்ட அற்புதக் கற்பனை உருவம் அற்ற கடவுளுக்கு உருவம் கொடுத்தான். சிற்பக் கலைஞன். அதற்குத் தகுந்த பெயரைத் தீட்டினான் தேன்மொழிக் கவிஞன்! இந்தக் கலைஞர்களும், கவிஞர்களும் சேர்ந்தால், கோடானு கோடிக் கடவுள்களை உண்டாக்கி, நம்மைத் திணற அடித்து விடுவார்கள், சரி! அதிருக்கட்டும்! தம்பீ! நீ என் அறிவை மணி மேகலையிடமிருந்து வேறு எங்கோ திருப்பச் சதி செய்கிறாய்! நான் அங்கே போக வேண்டும்! நீயும் என்னுடன் வா போகலாம். வயதாகி விட்டவன். ஆகையால் வழித்துணைக்கு வரலாம்! வா!