பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

சித்ரா

சாது

சித்ரா

சாது

சித்ரா

சாது

சிரிப்பதிகாரம்

இதென்ன நீதி சபையா? நியாயம் கேக்கறே? அப்போ நான் கொடுத்த நகை?

அது காக்கா துக்கிப் போயிட்டுது அடிசட் போய்யா கணக்கு கேக்கற இடமா இது:

கிழட்டுக் கழுதே! விளையாடாதே! என் பணத்தை திருப்பிக் கொடுத்துடு. இல்லாட்டி மனத்தைக் கொடு!

உஹாம் திருப்பிக் கொடுக்கிறதா? புது வெள்ளிக் கிழமை வரட்டும். இதோ பாரு கண்ணுல போட்டமை, புடவையிலே போட்ட சாயம், சுவத்துல அடிச்ச சுண்ணாம்பு, எங்ககிட்ட கொடுத்த பணம், இதெல்லாம் திரும்பி வராதுய்யா வராது. என்னமோ பெரிய அனுபவ சாலிங்கிறே! இது தெரியலே அடசே! போயிடு வெளியே! (தோழிகளிடம்) உம் கொண்டுபோய் வெளியே தள்ளுங்கடி இவனை. -

(அவர்கள் எல்லோரும் தாக்குகிறார்கள்)

ஆ ஐயோ ஐயோ! முடியாது. முடியாது. போகமாட்டேன். ஐயோ. தள்ளுறாங்களே. மேகலா மேகலா மேகலா!

(மேகலை ஓடிவந்து குறுக்கிட்டுத் தடுத்து விடுகிறான்)

(காசி- (b) முடிவு)