பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு

9


1. இந்தியாவும் ஏடுகளும்

சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு (1901)

சென்னை இராஜதானியின் சபாநாயகரே! சபையார்களே! நிகழ்ந்த இரண்டு மூன்று நாட்களாக இந்த மஹாசபையில் நமது குடிகளுடைய குறைகளைப் பற்றிப் பேசினோம். அப்படிப் பேசிய சங்கதிகளை நமது கவர்ன்மெண்டாருக்கும் ஏனையோருக்கும் அறிவித்தாலன்றி நமது குறைகள் நீங்கா வல்லவா? அப்படி நமது குறைகளை ஏனையோருக்கு அறிவிப்பதற்கு இன்றியமையாத சாதனம் சமாசாரப் பத்திரிகைகளாம். ஆகவே அச்சமாசாரப் பத்திரிகைகளைப் பற்றி இப்போது சற்றுப் பேசுகிறேன்.

ஆங்கிலேய பாஷையில் நியூஸ் என்னும் பதத்திற்குச் சமாசாரம் என்று பொருளாம். அதாவது நியூஸ் என்னும் நான்கு அக்ஷரங்களுடைய பதத்தில் N என் - என்கிற எழுத்து நார்த்து - வடக்கு என்றும், E என்கிற எழுத்து ஈஸ்டு - கிழக்கு என்றும், W டப்பிலியூ என்கிற எழுத்து வெஸ்டு - மேற்கு என்றும், S எஸ் என்கிற எழுத்து சவுத் - தெற்கு என்றும் கூடியதனால் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என்னும் நான்கு திசைகளில் நிகழும் நடவடிக்கைகள் அல்லது சமாசாரங்களை அறிவித்தல் என்பதைக் குறிப்பதாம்.

இப்படி நாலா பக்கங்களின் சமாசாரங்களைக் காட்டும் சமாசாரப் பத்திரிகை முதல் முதல் 1556இல் வெனிஸ் (Venice) பட்டணத்தில் பிரசுரம் செய்யப்பட்டும், 1622ஆம் வருஷம் இங்கிலண்டிலும், 1690இல் அமெரிக்கா பாஸ்டன் பட்டணத்திலும் பிரசுரம் செய்வித்ததாக உலக சரித்திரம் அறிவிக்கிறது. பிறகு 1699இல் எடின்பர்க்கு கெஜட்டும், 1705இல் கிரானிகளும் 1788இல் லண்டன் டைம்ஸ் (Times) என்கிற புகழ் பெற்ற பத்திரிகையும் பிரசுரிக்கப்பட்டன.

இதுகாலம் வரையில் சமாசாரப் பத்திரிகைகள் கேவலம் சாதாரண உலக விருத்தாந்த பத்திரிகைகளாக இருந்தன. ஆங்கிலேய நாட்டார் அவைகளை இப்போது நாலாவது சம்பத்தாக்கிக் (The fourth estate)