பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சிறந்த சொற்பொழிவுகள்

பாராட்ட வேண்டு மென்பதற்காகப் பணம் சம்பாதிப்பார்கள். சிலர் பணமூட்டைகளை அடுக்கி அழகு பார்ப்பதற்காகச் சம்பாதிப்பார்கள். இன்னும் சிலர் தமது வாழ்வை ஆடம்பரமாக நடத்தவேண்டும் என்பதற்காகப் பணம் சம்பாதிப்பார்கள். ஆனால் எந்தப் பணக்காரனும், அவன் எந்நாட்டவனாயினும் சரியே. அவன் தன் சுயநலத்திற்காக - சுய பெருமைக்காகப் பொதுவாழ்வில் ஈடுபடுவானே அல்லாது, தன்னலமற்று எவனும் பொதுவாழ்வில் ஈடுபடமாட்டான்.

ஆயுள் முடிந்து ஓய்வுபெறவேண்டிய காலத்தில்கூட தான் சம்பாதித்த பொருளின் முழுப் பயனையும் அடைய முயற்சிப்பானே அல்லாது, தன் எஞ்சிய காலத்தைப் பொதுவாழ்வுக்குச் செலவழிக்க இசையான்.

ஆனால், இவர்களுக்கு எல்லாம் மாறுபட்டவர் பெரியார். இவரும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையோடுதான் ஒரு மனிதனுடைய டாம்பீக வாழ்வுக்குப் போதுமான அளவுக்குப் பணம் சம்பாதித்துவிட்டார். தாம் சம்பாதித்த பொருளைக் கொண்டு எடுபிடி ஆள் நாலைந்து பேரை வைத்துக்கொண்டு எவ்வளவோ சுகமாக வாழலாம். எப்படித் தம் பணத்தை வாரி இறைத்தாலும் ஏனென்று கேட்க ஆளில்லை. அப்படியிருந்தும் பெரியார் என்ன செய்கிறார்? அவர் இப்படி சுகவாழ்க்கை வாழ்வதை விட்டு, இத்தள்ளாத வயதில்கூட, தமது நேரம் பூராவையும் பொதுநல ஊழியத்திலேயே செலவழித்துவிடுகிறார். ஆகவேதான் பெரியாருள் ஒரு பெரியார் என்று இவரை அழைக்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய பெரியார் இருந்ததாக உலக சரித்திரம் கூறக் காணோம். நாமும் இவரைத் தவிர வேறோர் பெரியாரைக் கண்டோமில்லை, இனியும் காணப்போவதில்லை என்பதுதான் என் அபிப்பிராயம். ஆகவேதான் நான் முதலிலேயே திராவிடநாடு அதிர்ஷ்டம் பொருந்திய நாடு, நாம் பிறந்திருப்பதால் அதிர்ஷ்டசாலிகள் ஆனோம் என்றேன். ஏனெனில் இத்தகைய ஒரு பெரியாரின் வாழ்நாளில் பிறந்திருக்கும் பேறு பெற்றுள்ளோம். ஆதலினால், -

பெரியாருக்குத் தனிப்பட்ட முறையில் யார் என்ன தீங்கு செய்தாலும் செய்திருந்தாலும் அதை, மனித சுபாவமே அப்படித்தான் என்று கூறிப் பொறுத்துக்கொண்டு விடுவார். ஆனால், இயக்கத்தைப் பொறுத்தமட்டில் சிறிது தவறு செய்துவிட்டாலும் உளம் பொறார். கலபத்தில் ஆத்திரம் கொள்வார். தயை தாட்சண்யமின்றிச் சற்றும் பொறுப்பில்லாதவன், முட்டாள். போக்கிரி, சோம்பேறிப்பயல் என்றெல்லாம்கூடச் சமயசந்தர்ப்பம் பாராமல் ஏசிவிடுவார். இயக்கத்தின் மீது அவ்வளவு பற்றுதல் உள்ளவர். அவரது தன்னலமற்ற இந்த இயக்கப்