பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜி. டி. நாயுடு 119

சோதிடர்கள் ஒவ்வொரு ஜாதகத்திலும் ஏதாவது ஒரு குறையைச் சொல்லி அதை வேண்டாம் என்று தள்ளிக்கொண்டே வந்தார்கள். ஆனால் இவரும் சலித்துப் போகாமல் பல ஊர்களுக்குப் போய் 500 ஜாதகங்களுக்கு மேல் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார். அப்படிச் செய்தும்கூட அவைகளில் எந்த ஜாதகமும் பொருத்தமில்லை என்று தள்ளிவிட்டார்கள்.

இது விஷயத்தை அறிந்த நான் அவரை அழைத்துச் சோதிடம் பார்ப்பது மூடநம்பிக்கை, மனத்துக்குப் பிடித்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள்” என்று சொன்னேன். பிறகு ஜாதகமே பார்க்காமல் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு ஒற்றுமையாகக் குடும்பம் நடத்திவருகிறார்கள்.

ஒரு பெண் குழந்தைக்குக் கூடத் தகப்பனாராகியுள்ளார். அவரைப் போலவே இன்னும் எத்தனை கோடிக் கணக்கான பேர்களைச் சோதிடர்கள் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். ஒன்றும் தெரியாதவன்கூடத் தன்னுடைய வயிற்று பிழைப்புக்காகச் சோதிடம் சொல்ல ஆரம்பித்துவிடுகிறான்; அதையும் நம்பி ஏமாந்து போகிறார்கள். -

நானும்கூட இது போன்ற மூட நம்பிக்கைகளில் உழன்றவன்தான். ஆனால் கொஞ்ச நாளைக்குப் பின் பகுத்தறிவு என்ற ஒன்று இருக்கின்றது என்று தெரிந்து அந்தப் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் இதைப் போன்ற முட்டாள்தனம் வேறு ஒன்றும் இல்லை என்று தெரிய வந்தது. -

ஒன்றும் இல்லாததற்குச் சர்வ வல்லமையுள்ள கடவுள் என்று சொல்லுகிறார்கள். அந்தக் கடவுளினால் ஏதாவது பயனுள்ள ஒன்று செய்ய முடிந்ததா? அல்லது வேறு இடுக்கண்கள் வந்தபோது அவற்றை நீக்க முடிந்ததா? ஒரு சக்தியும் இல்லாதபொழுது இவ்வளவு பலமாக நம்பிக்கை வேர் ஊன்றியவர்களுக்கு அப்படி ஏதாவது ஒரு சக்தி இருந்தால் என்ன செய்வார்களோ? தெரியாது. -

சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு என் கல்யாணத்தின்போது சடங்குகள் எதுவும் செய்ய ஒத்துக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு எந்தச் சடங்கும் இல்லாமலேயே கல்யாணம் செய்துகொண்டேன். -