பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு 23

2. மதுரை தமிழ்ச் சங்கம் சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு (1901)

பாண்டிய நாட்டை அலங்கரிக்க அவதரித்த பாண்டித் தேவரே! வித்தியா விநோதரே! இச்சபையிலிருக்கும் தலைமக்களே! நேற்று பத்தாவது மாகாண மஹா மண்டபத்தில் நமது குடிகளுடைய குறைவு நிறைவுகளைப் பற்றிப் பேச ஒரு சபையும், அப்படிப் பேசும் சங்கதியைப் பலருக்கும் அறிவிக்கச் கதேச மித்திரன், இந்து, முதலான சமாசாரப் பத்திரிகைகளும் இன்றியமையாதன வென்றும், ஆகவே, அப்பத்திரிகைகளை ஆதரிக்க வேண்டியது நம்மவர் கடமை என்றும் சொன்னேனல்லவா? இன்று அப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு எழுத வேண்டிய பாஷையை, முக்கியமாக நமது தாய்ப் பாஷையாகிய தமிழை விருத்தி செய்ய வேண்டியதும் நம்மவர் கடமைய்ாகும். .

அமெரிக்கா கண்டத்தில் வித்தையிலும் விஞ்ஞானத்திலும் சிறந்த வால்டோ எமர்சன் என்னும் வித்துவான், தாமெழுதிய ஒர் வியாசத்தில்,

. # . . х х

"இவ்வுலகம் அறிஞருடைய உள்ளங்கைக்குள் அகப்பட்டு ஆடும் பந்தைப் போலும் செண்டைப் போலுமிருக்கிறது. அவர்கள் அதை அடக்கி யொடுக்கித் தம்மிஷ்டப்படி எல்லாம் ஆடக்கூடும்” - - -

என்று சொல்லி இருப்பதற்கேற்ப, நம் தமிழ்நாட்டினரும், "உலகம் அறிவுடையார் மாட்டு” என்று எழுதினர். அதாவது, இந்த உலகத்தில் அநந்த கோடி ஜனங்களிருக்கினும், அவர்களெல்லோரும் அறிவுடைய சில புத்திமான்களுடைய ஆக்கினைக் குட்பட்டிருக்கின்றனர் என்பதாம். இந்த வாக்கியத்தின் அருத்தத்தை அறிந்து அனுஷ்டித்து வந்த நமது முன்னோர்கள், அஷ்ட ஐசுவரிய்த்துடன் ஆரிய் தேசத்தை அடக்கி ஆண்டு ஆனந்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள். . .

மத்திய காலத்தில் நம் முன்னோர்கள் இந்த மகுட வாக்கியத்தின் மகத்துவத்தை அறியாமல் அசட்டை செய்தனர். அன்று முதல் இந்நாட்டின் கல்வி, செல்வம், சீர்திருத்தம், சிறப்பு முதலானவைகளைத் தினேதினே நாம் இழந்துகொண்டு வந்து கடைசியாக நம் நாட்டையும் இழந்து விட்டோம். -