பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சிறந்த சொற்பொழிவுகள்

மிருகங்களினும் மேலாக மதிக்கப்படுகின்றனர். வாழ்க்கையால் மனிதர்கள் அடையக் கூடிய உணர்ச்சிகளெல்லாம் சிதறிப் பரந்து கிடக்கின்றன. நாடகத்திலோ அவைகளெல்லாம் குறுக்கிச் சேர்த்துக் காட்டப்படுகின்றன. பல வருஷக்காலம் பல வகையான ஸ்திரி புருஷர்கள் அனுபவித்த இன்பதுன்ப உணர்ச்சிகளையெல்லாம் நாடகமானது மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குள் நமக்குக் காட்டுகின்றது. ஆதலால் நாடகத்தை வாழ்க்கையின் சாரம் (Essence of Life) என்றும் சொல்லலாம்.

எப்பொழுது நாடகம் வாழ்க்கையின் சாரமாய் விட்டதோ அப்பொழுதே அது வாழ்க்கையின் சிறந்த பாகமாக வேண்டும் என்பதும் ஏற்பட்டுவிட்டது. எப்படி என்றால், ரோஜாமலர் வேண்டுபவர்கள் அன்று மலர்ந்த ரோஜா, முதல்நாள் மலர்ந்த ரோஜா, நன்றாய் மலர்ந்த ரோஜா என்று வித்தியாசம் பாராட்டாமல் கூடியவரையில் நல்ல ரோஜாக்களை மட்டும் பார்த்து எடுத்துக் கொள்ளுவார்கள். ரோஜாவின் சாரம் வேண்டுபவர்கள் அப்படி எடுக்க முடியாது. அப்பொழுது மலர்ந்த சிறந்த ரோஜாக்களை மட்டுமே தெரிந்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சாரம் கெட்டுப்போகும். -

இப்படியேதான் நாடகத்திலும் வாழ்க்கையின் சிறந்த பாகங்கள் இன்னவென்று ஜாக்கிரதையோடு தெரிந்தெடுத்து அமைக்கப்பட்ட நாடகந்தான் நல்ல நாடகம் ஆகும். நல்ல ரோஜாவின்சாரம் போல மிகுந்த பயன் கொடுப்பது அவ்விதமான நாடகங்கள் தான். அவ்விதம் அமைக்கப்படாத நாடகங்கள் கெட்ட ரோஜாவின் சாரம் போல் மிகுந்த கெடுதல்களை விளைவிக்குமேயன்றி நன்மை விளைக்க மாட்டா. ஆதலால் நாடகத்தை எழுதுபவர்களும், நாடகத்தை நடிப்பவர்களும் மிகுந்த நுண்ணறிவும், பெருந்தன்மையும், அனுதாபமும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும்.

நாடகத்தின் பயன்

அப்படிப்பட்டவர்களால் எழுதப்படும் அல்லது நடிக்கப்படும் நாடகங்களைப் பார்ப்பதால் மக்களுடைய மன இயற்கை திருந்தும். அதனால் வாழ்க்கை சிறப்படையும். அதனால் உண்மை நாகரிகம் தலை, துக்கும்.

எப்படி என்றால், ஆன்மாவின் இயல்பு எதைச் சார்கிறதோ அதன் வண்ணமாகும். ஒரு கண்ணாடிக்கெதிரே நீலநிறத்தைக் காட்டினால்