பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம். டி. சுப்பிரமணிய முதலியார் 49

மக்கள் உடம்புக்கும் உணவுக்கும் தேச கால இயல்புகளுக்கும் பொருத்தமானது. பிற வைத்தியங்களில் தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்க வல்ல உயர்ந்த மருந்துகளை ஏராளமாக உடையது. பதினாயிரக் கணக்கான பாட்டுகள் அடங்கிய அச்சுப் புத்தகங்களும் ஏட்டுச் சுவடிகளும் மிகுந்துள்ளது. நாடுகளிலும் நகரங்களிலும் அரண்மனைகளிலும் இன்றைக்கும் இருந்து வருகிறது சித்த வைத்திமே.

இவ்வளவு பெருமை வாய்ந்த சித்த வைத்தியத்தை நமது நாட்டுச் செல்வம் படைத்த மக்களும், அரசு புரிவோரும் போற்றாமல் விட்டுவிட்டதினால் சித்த வைத்தியர்களுடைய நிலைமை தாழ்ந்து வருகிறது. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை அரசியல் முதலாவதாகக் கவனிக்க வேண்டும்.

சமீப காலத்தில் திராவிட மக்கள் தலைவராகிய பனகால் ராஜா அவர்களுடைய பெருந்தன்மையான முயற்சியினால், சென்னையில் இந்திய மருத்துவ கலாசாலை ஒன்றை அரசாங்கத்தார் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதற்காக நாமெல்லோரும் கனம் பனகால் ராஜா அவர்களுக்கும் அரசாங்கத்தாருக்கும் நன்றி செலுத்துகிறோம்.

சென்னை ராஜதானியில் 22,832 கிராமங்களிருக்கின்றன. இவைகளுக்கு 800 ஆங்கில வைத்திய ஆஸ்பத்திரிகள்தான் அமைத்திருக்கிறார்கள். அப்படியானால் 28 கிராமங்களுக்கு ஒரு ஆஸ்பத்திரிதான் இருக்கிறது. ஆகையால், மற்ற கிராமங்களிலுள்ள மக்களுக்குச் சுதேச வைத்தியர்கள்தான் மருந்து கொடுத்து இன்றைக்கும் குணப்படுத்தி வருகிறார்கள் என்று நிச்சயமாய்த் தெரிகிறது.

சென்னை ராஜதானியில் மொத்தம் 25,815 வைத்தியர்களில் நாட்டு வைத்தியர் சுமார் 20,000 பேர்கள் இருக்கிறார்கள் என்றால், நமது வைத்தியம் எவ்வளவு பெரியது என்று பாருங்கள். நமது வைத்தியம் கிராமத்தார்களுக்கும், ஏழைகளுக்கும் உதவியுள்ளது. ஏனென்றால், ஆங்கில வைத்தியத்தில் ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு மருந்துச் செலவு 3 அணா முதல் 6 அணா 2 பைசா வரையில் ஆகிறது. வடமொழி ஆயுள்வேத வைத்தியத்தில் 9 முதல் 11 பைசா செலவாகிறது. ஆனால் சித்த வைத்தியத்தில் 6 முதல் 7 பைசாதான் செலவாகிறது. ஆகையால், தமிழ்ச் சித்த வைத்தியமே நமக்குப் பல வழிகளிலும் நன்மை யுள்ளதாயிருக்கிறது. நமது நாட்டில் இதை மறுபடியும் நிலைநாட்டுவதற்கு நாமெல்லாரும் பெரிய முயற்சியும் கிளர்ச்சியும் செய்ய வேண்டும்.

இப்பொழுது சென்னை சட்ட சபையில் வைத்திய உதவியைப் பற்றி வாதம் நடப்பதில் வெளியூர்களுக்குப் போதுமான அளவு வைத்திய