பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சனக சங்கர கண்ணப்பர் 57

இளைஞர்களே! இவ்வுண்மைகளெல்லாம், உலக சரித்திரம் படிப்பார்க்குத் தெள்ளத் தெளிய விளங்கும். ஆகலான் இளைஞர்களால் விடுதலை பெற்ற நாடுகளில் சிலவற்றை எடுத்துக் கூறுவோம்.

பிற இடங்களில்

முதலில், ஜெர்மனியை எடுத்துக் கொள்வோம். இந்நாடு பல தத்துவ நூல்களையும் இலக்கண இலக்கிய நூல்களையும் ஈன்றதாகும். சென்ற 25 ஆண்டுகட்கு முன் இந்நாட்டில் இளைஞர் இயக்கம் தோன்றிற்று. அவர்களுக்குப் பெரியோர்கள் கொள்கை வெறுப்பைக் கொடுத்தது. பெரியோர்கள் எப்பொழுதும் ஆசை மிகுதியாய் சண்டைக்கு முனைந்து நிற்கும் கொள்கை இளைஞர்கட்கு விருப்பத்தைக் கொடுக்கவில்லை. ஆகவே, இளைஞர் இயக்கம் சண்டை வெறி பிடித்து அமுங்கிக் கிடந்த ஜெர்மனியைச் சீர்திருத்த இங்கு எழுந்ததாகும்.

முதன்முதலாக ஜெர்மனிய இளைஞர்கள், கிராமங்கள் தோறும் சென்று ஏழைகளுடன் கலந்துறவாடி, அவர்கள் குறைளை அறிந்துணர முற்பட்டார்கள். இது பெரியோர்கட்கு மனக் கசப்பாய் இருந்தது. இஃது ஒரு புறமிருக்க, சண்டை கிளம்பிவிட்டது. விடவே, இளைஞர்கள் தங்கள் விருப்பத்துக்கு மாறாய்ச் சண்டை கிளம்பிய தென்பதையும் பொருட்படுத்தாது, தம் நாட்டைப் பாதுகாப்பதன் பொருட்டு இரத்தம் சிந்த முற்பட்டு வந்தார்கள். சண்டை தீர்ந்து அமைதி நிலவியதும் பெரியோர்கள் இளைஞர்கள் சொற்களைக் கேட்பார்களென்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் ஏமாற்றமடையவே, இளைஞர் தமக்கெனத் தனிக் கழகங்கள் நிறுவிக் கொண்டு, சண்டையால் தம் நாட்டில் ஏற்பட்ட வறுமையைப் போக்கப் பாடுபட்டு வருகிறார்கள். - -

இனிக் கானாடாவிலோ, இளைஞர் இயக்கம் மிக வலுவாய் இருக்கின்றது. அவர்கள் தங்களுக்கெனப் பாராளுமன்றங்களும், நகர சபைகளும் நிறுவிக் கொண்டு தங்களுக்குள்ளேயே நகர சபை அங்கத்தவர்களும் தலைவர்களும் உடைத்தாய் இருக்கின்றார்கள்.

இளைஞர் தங்கள் நகர சபை வாயிலான் மக்களின் சுகாதாரத்தையும் கல்வியையும் கவனித்து வருகின்றார்கள். இனி ஒரு காலத்தில் “ஐரோப்பாவின் நோயாளி” என்று எண்ணி நகையாடப்பட்ட துருக்கி, இன்று பிரிட்டனும் நடுநடுங்கக் கூடிய வல்லரசாய்த் திகழ்தற்குக் காரணம் யாதுகொல்! கெமால் பாட்சாவைத் தலைமையாய்க் கொண்ட இளைஞர் இயக்கமன்றோ! இளைஞர் இயக்கத்தினால்தான் இப்பொழுது பெண்மக்கள் படிக்கக் கூடாது என்ற குருட்டு நம்பிக்கைகளும், சமய மூடக்கொள்கைகளும் துருக்கியை விட்டுப் பறந்தோடுகின்றன.