பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. 'நமசிவாய முதலியார் 65

8. அகத்தியர் வெறும் கட்டுக்கதை!

கா. நமசிவாய முதலியார் (2.2.1929)

சனிக்கிழமை மாலை 5 மணிக்குச் சென்னை அரசாங்கக் கலாசாலை 'இங்கிலீஷ் லெக்சர் மண்டபத்தில் மேற்படி கலாசாலைத் தமிழ் விரிவுரையாளர் திரு. கா. ரா. நமசிவாய முதலியாரவர்கள் தமது ரீடர்ஷிப் லெக்சராக அகத்தியர்' என்பது பற்றி ஒரு மணி நேரம் பின்வருமாறு

பேசினார்கள்.

என்னைச் சென்னை யூனிவர்சிட்டியார் ரீடராக நியமித்தது எனக்கு மாத்திரம் கெளரவமன்று. என்னைப் போன்ற தமிழ்ப் பண்டிதர்களையும் கெளரவித்ததேயாகும். அவ்வாறே என்னையும் தமிழ்ப் பண்டிதர்களையும் கெளரவித்த இந்த யூனிவர்சிட்டியாருக்கு எனது மனமார்ந்த வந்தனம்.

நூல்களிலே திருவள்ளுவர் திருக்குறள் மேலாக மதிக்கப்படும் நூல். அதற்குப் பல உரைகளிருந்தும் நாம் அதிகமாகப் படிப்பது பரிமேலழகர் உரைதான். இவ்வுரையே அதிகமாக அச்சிடப்பட்டிருக்கின்றது. அதனைப் படிக்கும்போது சில ஆட்சேபங்கள் தோன்றுகின்றன. பல உரைகளும் வெளிப்பட்டிருக்குமானால் இன்னும் பல விஷயங்களும் பல புதுக் கருத்துக்களும் தோன்றாமலிரா. அதே போல நான் எடுத்துக்கொண்ட விஷயமான அகஸ்தியரைப் பற்றி என்ன சொல்லியிருக் கின்றதென்று பார்ப்போம். - ... .

முதன் முதலாக ருக் வேதத்தில் இவர் பெயர் காணப்படுகிறது. அங்கே இவரை மாண்ய என்றழைக்கப்படுகிறது. மாணவின் புத்திரர் என்று பொருள். மான என்பது பிரமனுக்கு ஒரு பெயர். அதே நூலில் மித்திர வருணரது பிள்ளையென்று கூறப்பட்டிருக்கிறது. அது உண்மையா? இஃதுண்மையா வென்று யோசனை செய்யவேண்டும்.

அகத்தியர் என்ற சொல்லுக்குப் பொருள் இன்ன தென்று விளங்க்வில்லை. - - - • , r