பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சிறந்த சொற்பொழிவுகள்

திரணதுமாக்கினி என்ற சொல்லுக்குப் பொருளில்லை. ஒருவர் பேர் வைக்கும்போது பொருள் கவனித்தா வைக்கின்றனர். அஃது உண்மையாயினும் ஈண்டு இச்சொல் திரணம் என்றால் துகள் என்றும், தூமம் என்றால் புகையென்றும், அக்கினி யென்றால் நெருப்பு என்றும் பொருள்படும். ஆகவே கொள்ளி வைப்போன் என்று கொள்ளலாம் (சிரிப்பு). இவ்வாறு ஒரு பெயர் இருக்குமாவெனச் சபையினர் ஆலோசிக்க வேண்டும்.

மற்றொரு கதையைக் கேளுங்கள். அகத்தியர் தனது மனைவியை அழைத்து வரும்படி தொல்காப்பியரை அனுப்பினராம். அவர், எவ்வாறு அழைத்துவர என்று கேட்ட காலம்.............

..................... அகத்தியர்க்கு மாணாக்கர் சொன்னார். அவர் வெகுண்டு, மாணக்கரைச் சொர்க்கம் போகாமலிருக்கக் கடவது எனச் சபித்தனராம். இந்தப்படியொரு கதை கேட்டதுண்டாவென யோசியுங்கள்.

வைகையில் தண்ணிர் எத்தனை நாளைக்கு ஒடும். அன்றியும் தண்ணிர் அடித்துக்கொண்டுபோன ஒரு உயிரைக் காப்பாற்றியதற்கு மகிழ்ச்சியடைவார்களா? வருத்தப்படுவார்களா? அதற்கு வந்தனம் கூறுவதா? சாபமிடுவதா? அதனை இவரிடம் வந்து தெரிவிக்க வேண்டிய காரணம்தானென்ன? (பெருங்கரகோஷம்)

ஆனால் சொர்க்கம் என்பது வடதிசை என்பதால் இனி அவர் வடதிசை செல்ல வேண்டாமென்று சொல்லியிருக்கலாம். அஃதொருவாறு உண்மையாக விருக்கக் கூடும். - - -

இப்படிப் பல வித்திலும் நம்பமுடியாத கட்டுக் கதைகளே மலிந்து கிடக்கின்றன........ - -

சங்க நூல்கள் இறையனார் களவியற் செய்தி.................• --

- (முடிவு கிடைக்கவில்லை)