பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சிறந்த சொற்பொழிவுகள்

ஆரம்பக் கல்வி புகட்ட உற்சாகத்தை ஊட்டுவதுடன் உயர்தரக் கல்வி கற்க, செல்வமும் செளகரியமும் வாய்க்கப் பெற்றவர்களைத் தூண்ட வேண்டும். புத்திக் கூர்மையுள்ள எத்தனையோ ஏழை வாலிபர்கள் உயர்தரக் கல்வி கற்க வழியின்றித் தவிக்கிறார்கள். இந்த ஏழைப் பிள்ளைகட்குப் பொருளுதவி செய்து கல்வி பயிற்றுவிக்க வேண்டும். பொருளுதவி செய்ய ஒவ்வொரு ஊரிலும் சங்கங்கள் நிறுவவேண்டும். அச்சங்கங்களுக் கென்று பெரும் நிதிகள் இருத்தல் வேண்டும். இந்த நிதிகளிலிருந்து ஏழைப் பிள்ளைகட்குக் கல்வி புகட்ட பொருளுதவி செய்ய வேண்டும்.

இதுபோன்ற சங்கங்கள் சில நம் ஊர்களில் நிறுவப்பட்டிருப்பதை யான் அறிவேன். இதுபற்றி யான் ஒருபுறம் மகிழ்வுறினும், மற்றோர் பக்கம் துக்கமடைகிறேன். ஏனெனில் சில சங்கங்கள் நிறுவப்பட்டுச் சில நாள் உயிரோடிருந்து மாண்டு மடிந்து போயின. எனவே சாலியர் வசிக்கின்ற ஒவ்வொரு ஊரிலும் சங்கமும் நிதியும் தோன்ற வேண்டுமென்பதே எனது அவா.

ஆடவர்களுக்குக் கல்வி கற்பித்து வருவதுடன் பெண்மக்களுக்கும் கல்வி புகட்ட வேண்டும். தாய்மார்களே, சிறுவர்களுக்கு முதல் ஆசிரியர்களாக அமைகின்றனர்.

கற்ற பெண்களையுடைய சமூகங்களிலே தான் அறிவும், ஆற்றலும், வாய்க்கப் பெற்ற வாலிபர்கள் காண்பது சகஜமாயிருக்கின்றது. ஆகையால், பெண்களுக்கும் கல்வி அத்தியாவசியம்.

உயர்தரக் கல்வி கற்று, இல்லாத பட்டங்களையெல்லாம் பெற்று உத்தியோகம் பெற வேண்டுமென்று யான் சொல்லவில்லை. குழந்தைகளைச் சரிவர வளர்க்கவும், குடும்பக் காரியங்களைச் சரிவர நடத்தவும் அவசியமுள்ள கல்வியையாவது புகட்ட வேண்டும். செல்வச் சிக்கனம், சுகாதாரம், பிள்ளை வளர்ப்பு ஆகிய அறிவைப் புகட்ட வேண்டியது இன்றியமையாதது.

ஒழுக்கம், பழக்க வழக்கங்கள்

சமூகம் சிறக்க, கல்வியோடு ஒழுக்கமும் வேண்டும். ஒழுக்கமற்ற கல்வி பொய்மையை மெய்யென்றும், மெய்மையைப் பொய்யென்றும் சாதிக்கும். இது கொடிய விஷயமேயாகும். நமக்கு மேல் என்று கருதப்படுபவர்கள் நம்மை நேசிக்க வேண்டும். நம்மை சமமாகப் பரவிக்க வேண்டும் என்று விரும்புவது போல நமக்குக் கீழ் என்று கருதப்ப்டுபவர்களை நேசித்து அவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும்.