பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சிறந்த சொற்பொழிவுகள்

ஸாக்ஸ்னி என்பது ஐரோப்பாவின் உள்நாடு. அந்நாட்டில் விவாக முகூர்த்த தினத்தன்று மணமகன் மணமகள் நெய்த உடையையே உடுத்துவது வழக்கமென்று விபர் துரை கூறுகின்றார்.

இங்கிலாந்தில் மனிதனுக்கு அவசியம் வேண்டிய அன்னம் ஆடை இரண்டையும் தரக் கூடிய தொழில்கள் விவசாயமும் நூற்றல் நெய்தலுமாகையால் ஆண்கள் விவசாயத்தையும், பெண்கள் நெய்தல் தொழிலையும் செய்ததாக அர்த்தம் விளங்கும் பதங்கள் இங்கிலிஷ் பாஷையில் வழங்குகின்றன. இத்தகைய உயர்ந்த தொழில் யந்திர வரவினால் அழிந்துவிட்டதைக் குறித்து ஆங்கில சமஸ்தான வித்வான் வர்ட்ஸ்வொர்த் மகாகவி வருந்துகிறார்.

தமிழ் வேதம் உரைத்த திருவள்ளுவ நாயனார் அதில் உழவுத் தொழிலைப் புகழ்ந்ததோடு, செய்யும் தொழிலெல்லாம் நெய்யும் தொழிக்கு நிகரில்லை எனக் கூறியிருக்கிறார். அவர் செய்து வந்த தொழிலும் நெய்தலேயாகும்.

இந்தியாவின் முற்கால கிலைமை

நூறு வருஷங்களுக்கு முன் நூற்றல் நெய்தல் தொழிலில் இந்தியாவின் நிலைமை என்னவென்று பார்ப்போம். உலகத்திலுள்ள பல ஜாதியாரில் இந்தியர்களே முதன் முதலில் இத்தொழிலைக் கையாண்டார்கள் என்பதற்கும், அது பல்லாயிர வருஷங்களுக்குமுன் என்பதற்கும், பல அத்தாகூதிகள் உண்டு. இந்தியர்களே முதன் முதலில் நாகரிகம் அடைந்தனர் என்பதை அறிஞர் பலரும் ஒப்புக்கொள்கின்றனர். மனிதனுக்கு அத்யாவசியமாகிய அன்னத்தையும் ஆடையையும் உற்பத்தி செய்து உபயோகிப்பதே நாகரிகத்தின் முதல் அம்சமாகும்.

உலகத்தில் முதல் முதலாக இயற்றப்பட்ட நூல் இந்து வேதங்களென்றும், அவை இயற்றப்பட்ட காலம் பல்லாயிர வருஷங்களுக்கு முன் என்றும், அறிவாளிகள் முடிவு செய்திருக்கிறார்கள். அவ்வேதங்களில், உழுதல் நெய்தல் முதலிய பதங்கள் அடிக்கடி காணப்படுகின்றன. ஆகவே வேத காலத்திற்கு முன்னதாகவே இந்தியர்கள் உழுதும் நெய்தும் ஜிவித்திருக்க வேண்டும். -

இந்தியர்கள் நெய்த துணி அழகாயும் மெல்லியதாயும் இருந்தது. அவை பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. அதனால் இந்தியர்களுக்கு ஏராளமான செல்வம் கிடைத்தது. - -

300 வருஷங்களுக்கு முன் எகிப்து தேசத்தில் அரக்ாண்ட அரசர்களின் தேகங்கள் மீது போர்த்தப் பட்டிருந்த துணிகள் மெல்லியவை; இந்தியவில் நெய்யப்பட்டவைகள் என்று மேல் நாட்டார் கூறுகின்றனர். -