பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சிறந்த சொற்பொழிவுகள்

1854இல் இந்தியர்கள் ஒரு ராத்தல் பஞ்சிலிருந்து 250 மைல் நீளமுள்ள அதாவது 500ஆம் நெம்பர் நூல் நுற்றதாக டாக்டர் டெயிலர் துரை எழுதுகிறர்.

நூற்றல் தொழில் அழிந்து போனாலும் நெய்தல் தொழில் முன்போலவே உலகத்தாரால் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது. 1900ஆம் வருஷம் இங்கிலாந்தில் ஒல்ட்ஹாம் பட்டணத்தில் நடந்த கண்காட்சியில், தலைவர் இந்தியரின் துணிகளைப் புகழ்ந்து இந்தியரின் கைவேலைப்பாட்டிற்குச் சமமாக நம்மால் நெய்ய முடியவில்லையே என்று வருந்தியிருக்கிறார்.

லண்டனில் நான் வழக்கமாய் ஆராதனைக்குப் போகும் ஒரு பெரிய கோவிலில், பாதிரியார் ஒருவர் 6-மாதம் இந்தியா தேசம் சுற்றிப் பார்த்துத் திரும்பி வந்த பின்னர், தான் இந்தியாவில் கண் கண்காட்சிகளை விவரித்துச் சொன்னதாவது:- -

இந்தியர் ஒருவர் பித்தளைத் தட்டில் சித்திரம் வரைந்து கொண்டிருக்கிறதைப் பார்த்து, தாங்கள் முன்னுக்கு மாதிரியில்லாமல் எப்படி வரைகிறீர்களென்று கேட்டதற்கு, அவர் தம் தலையைத் தொட்டு, 'மாதிரி என் மூளையில்தான் இருக்கிறது என்றாராம். இது பிரிட்டிஷ் தொழிலாளிக்கும் இந்தியத் தொழிலாளிக்கும் உள்ள வித்தியாசம். பிரிட்டிஷ் தொழிலாளி முன்னுக்கு மாதிரி ஒன்றில்லாது சித்திரம் வரைய முடியாது. இதிலிருந்து ஞான அர்த்தமான கடவுள் தம்முடைய மனதிலிருந்தே உலகத்தையும் மனிதர்களையும் சிருஷ்டித்தார் என்று அந்தப் பாதிரியார் பிரசங்கம் செய்தார். -

ஆங்கிலச் சித்திரக்காரர் ஒருவர் ஒரு சமயம் இந்திய தேசத்தைச் சுற்றிப் பார்த்துத் திரும்பின பின், லண்டனில் இந்திய மகாசபைக் கூட்டத்தில் நம்முடைய கிராமில்களின் அமைப்பையும் இயற்கை செயற்கை அலங்காரத்தையும் நமது வீடுகளின் உட்புற வெளிப்புறச் சித்திரச் சிறப்பு மகிமையையும் விஸ்தாரமாய் எடுத்துரைத்தார். நாம் அணியும் ஆடை ஆபரணங்களின் வேலைப் பாட்டிலிருந்தும் உருவங்களிலிருந்தும் சேலைகளின் வேஷ்டிகளின் அழகான சித்திரம் தீர்ந்த கரைகளிலிருந்தும் சரித்திர காலவரைகளை வரையறுக்க முடியுமென்று சொன்னார். இந்தியர்களுக்கு இது ஆச்சரியமாயிருந்தது. இப்படி நமது புராதனக் கலைகளையும் சாஸ்திரங்களையும் நமது தினசரி வாழ்க்கையிலும் குடியிருக்கும் வீடுகளிலும் அணியும் ஆடை ஆபரணங்களிலும் உருவாகக் கொண்ட நடிக்கு அந்நிய நாட்டார் உணர்த்திக் காட்ட வேண்டியிருக்கிறது.