பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பொன்னையா பிள்ளை 89

செய்து வந்தார்கள். கி.பி. 1576இல் முதல் 1620 வருஷம் வரையில் தஞ்சையை ஆண்டு வந்த இராஜாக்களில் ரகுநாத நாயக்கர் என்பவர் சங்கீத சாகித்தியத்தில் வல்லவராக இருந்து, அதை வளர்ப்பதற்குப் பெரு முயற்சி எடுத்துள்ளார். அவர் வீணை வாசிப்பதில் திறமை வாய்ந்தவர் என்று அக்காலத்து கோவிந்த தீட்சதர், வெங்கிடமகி ஆகிய வித்வான்களால் புகழப் பெற்றவர். அவர் சங்கீத வித்வான்களின் கூட்டுறவின் பேரில் "சங்கீத சுதாநிதி' என்னும் நூல் இயற்றினார். ரெகுநாத வீணை யென்று இவர் பெயரால் ஒரு வீணையும் இருந்திருக்கின்றது.

மகாராஷ்டிர அரசரான ஷாஜி மகாராஜாவும் சங்கீதக் கலையை விருத்தி செய்துள்ளார். அவருக்குப் பின்னர் கி.பி.1760 முதல் 1790 வருஷம் வரையில் ஆண்டு வந்துள்ள ஜாமகாராஜா என்பவர் சங்கீத வளர்ச்சிக்கென்று ஒரு நாடக சாலையை எற்படுத்தி பரதம், வாய்ப்பாட்டு, வாத்தியங்கள் இவைகளைத் தனித்தனியே கவனித்து வளரும்படி செய்துள்ளார். . -

இவர் காலத்தில், தஞ்சை சின்னையா, பொன்னையா, சிவானந்தம் வடிவேலு என்னும் நால்வர், ஒவ்வொருவரும் சங்கீதத்தின் ஒவ்வொரு பாகத் தில் பாண்டித்ய முடையவரா யிருந்து மகாராஜாக் களின் கூட்டுறவினால் சாகித்ய முதலியவைகள் செய்து சங்கீதத்தை விருத்தி பண்ணினார்கள். - * - -

. . . - வடிவேல் என்பவர்தான். பிடில் வாத்தியத்தை முதன் முதலில் தென்னாட்டு சங்கீதத்திற்கு அமைத்து வாசித்துக் கீர்த்தி அடைந்தவரென்று சர். செளரிந்தர மோகன டாகூர் தனது நூலில் எழுதியுள்ளார்.

இதுவரையிலும் நான் சொல்லி வந்த કી, உதாரணங்களினால் தென்னாட்டில் சங்கீதம் வளர்ந்து வந்ததற்குக் காரணம் தமிழ் மக்களின்

போதிய ஆதரவு என்பதற்கு ஐயமில்லை.

சங்கீதத்தின் தற்கால கிலைமையும். நம் கடமையும்

தற்காலம் சங்கீதக் கலையானது ஆதரிப்பாரின்றி நாளுக்கு நாள் குறைவுபட்டு வருகின்றது. இது சமயம் நமது செட்டிநாட்டு அரசர் ராஜா சர். அண்ணாமலையார் சங்கீத பல்கலைக் கழகம் நிறுவி, தமிழ் நாட்டிற்கு ஒரு பேருதவி செய்திருக்கிறார். வள்ளல் ராஜா அவர்களுக்கு, தமிழ் நாட்டார் பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவர்களைச் சங்கீதம் கற்கும்படி அனுப்புவதே ராஜா அவர்களுக்கு நன்றி செலுத்துவதாகும்.