பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பொன்னையா பிள்ளை

93

தஞ்சை கே. பொன்னையாபிள்ளை

(1887 - 1945)

இசைப் புலவர். பரோடா சமஸ்தான வித்துவானாக விளங்கிய கண்ணுசாமிப் பிள்ளைக்கு மகனாக இவர் சர்வசித்து, தை இரண்டாந் தேதி பிறந்தார். இவருடைய மாமனாரான பந்தணை நல்லூர் சூ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் இளமை முதல் இவர் இசையும் நாட்டியமும் பயின்று தேர்ச்சி பெற்றார். மிருதங்கம் வாசிப்பதிலும் இவருக்குத் திறமை உண்டு. இக்கலைகளை இவர் பலருக்குப் பயிற்றுவித்துச் சிறப்படையச் செய்தார். பிறகு இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிறுவப் பெற்ற இசைக் கல்லூரியில் ஆசிரியராய் விளங்கினார். சிறிது காலத்திற்குப் பின் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இசையாசிரியராகப் பணியாற்றினார்.

இவர் பல தான வர்ணம், கீர்த்தனை, தில்லானா முதலியவற்றைத் தமிழிலும் தெலுங்கிலும் இயற்றியுள்ளார்.

இசைப் பயிற்சியின் தொடக்கத்தில் வேண்டிய சஞ்சாரி கீதம், இலட்சணகீதம் முதலியவற்றைத் தமிழிலேயே செய்துள்ளார். -

1943-ல் இவர் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்று, இசைக் கல்லூரியில் பேராசிரியர் பதவியை ஏற்றார். பல தமிழ்ப் பாடல்களை இயற்றியதோடு 'இசையியல் என்ற இசை இலக்கண நூலையும் எழுதியுள்ளார். தம் முன்னோர்கள் செய்த பாடல்களைத் தொகுத்து, "தஞ்சைப் பெருவுடையாரின் பேரிசை" என்ற பெயரில் வெளியிட்டார்.

சென்னைச் சங்கீத வித்வத் சபை இவருக்குச் சங்கீத கலாநிதி என்ற பட்டமளித்துச் சிறப்புச் செய்துள்ளது. இவர்

இசைப் பேராசிரியர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றபின், தம்

சொந்த ஊராகிய தஞ்சைக்குத் திரும்பினார். பின்னர் 30-6-1945-ல் காலமானார். ': '

- கலைக்களஞ்சியம்