பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வையும் பாட்டியையும் காண தவித்தாள். ஷாகன்ஞ் நகருக்கு வேலையாகச் செல்லவிருந்த ஒரு முதிய விவசாயி அவளைத் தன்னுடன் கூட்டிச் செல்ல முன் வந்தான்.கிருஷ்ணனும் தன்னோடு வருவான் எனஅவள் நம்பினாள். ஆனால் அவன் கிராமத்தில் காத்திருப்பதாகக் கூறினான். மற்றும் பலர் அங்கு வருவார்கள், அவர்களிடையே தன் சொந்தக்காரர்களும் இருப்பர் என அவன் அறிவான்.

"இனி உனக்கு கஷ்டம் இல்லை. உன் தாத்தாவை நீ சீக்கிரமே கண்டாக வேண்டும். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தண்ணிர் வற்றிவிடும். நீங்கள் தீவுக்குத் திரும்பி விடலாம்" என்று அவன் சொன்னான்.

"அந்தத் தீவு அங்கே இருந்தால்" என்றாள் சீதா.

விவசாயியின் மாட்டுவண்டியில் அவள் ஏறியதும், அவளிடம் கிருஷ்ணன் ஒரு புல்லாங்குழல் கொடுத்தான்.

"இதை எனக்காக வைத்திரு. இதைப் பெற ஒரு நாள் நான் வருவேன்" என்றான். அவள் தயங்குவதைக் கண்டதும், அவன் சொன்னான். இது ஒரு நல்ல குழல்!"

***

மாட்டுவண்டி மெதுவாகத்தான் போயிற்று. கிராமத்து சாலைகள் பெரும்பாலும் அழிந்திருந்தன. வண்டிச் சக்கரங்கள் சேற்றில் சிக்குண்டன. குடியானவனும் அவன் பெரிய மகனும், சீதாவும்.அடிக்கடி கீழே இறங்கி, கிறீச்சிடும் பெரிய மரச் சக்கரங்களை மேலே தூக்கித் தள்ளிவிட நேரிட்டது. காளைகள் உடல் முழுதும் சேறு தெறித்திருந்தது. சீதாவின் கால்களிலும் அது அப்பியிருந்தது.

ஒரு பகலும் ஒரு இரவும் வண்டியில் பயணம் செய்து அவர்கள் ஷாகன்ஞை அடைந்தார்கள். அதற்குள், சீதா அடையாளம் தெரியாதபடி மாறியிருந்தாள். சுறுசுறுப்பான சந்தை நகரின் குறுகிய கடைவீதியில் அவள் நடந்தான்.

தாத்தா அவளைக் கண்டு கொள்ளவில்லை. அவர் நேரே பார்த்தபடி நிமிர்ந்து நடந்து சென்றார். துளசி படிந்து தலைமுடி குலைந்து காணப்பட்ட சிறுபெண்ணைக் கடந்து போயிருந்திருப்பார் அவர். ஆனால் அவள் நேரே அவருடைய மெலிந்து தள்ளாடிய கால்களில் பாய்ந்து, அவரை இடுப்பை வளைத்துக் கட்டிப்பிடித்தாள்.

அவர் தன்னிலை பெற்று மூச்சுவிடத் தொடங்கியதும், "சீதா!" எனக் கூவினார். "நீ இங்கே எப்படி வந்தாய்? ஏன் தீவை விட்டு வந்தாய்? அங்கிருந்து எப்படி வெளிப்பட்டாய்? எனக்கு ஒரே கவலை-சென்ற இரண்டு நாட்களாக நிலைமை மோசம்...."

44