பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

வறுமையின் தாக்கத்தைத் தாங்குவது கடினமானதுதான். இருப்பினும் பொறுமைக்குச் சிந்தனையுடன் கூடிய அறிவுடன் செயல்படு.

நல்லதும் கெட்டதும் உனக்குச் சோதனைகள். எனவே, எந்த நிலையிலும் கவனமாக இரு.

முன்னேற்றம் உனக்கு ஊக்கத்தையும் மன மகிழ்ச்சியையும் தருகிறது. அதே நேரத்தில் நீ பெற்ற வளம் உன் விரைவையும், உணர்ச்சி யையும், பலத்தையும் செயல்படாத நிலைக்கு, ஆளாக்கி விடுகிறது.

வறுமை உன்னை ஆட்கொண்டு விட்டால் கட்ட நீ கவலைப்படாதே. அதுவும் நிலைத்து இருப்பதில்லை. மீண்டும் நீ உன் ஆற்றலைக் கொண்டு அதனை அழித்து முன்னேறலாம். வறுமையில் வாழும் மனிதன் தன்னை எல்லோரும் கை விட்டுவிட்டதாக நினைக்கிறான். தன் மனத்தில் தோன்றிய ஆசைகள் நிறைவேறவில்லையே என்று ஏக்கமடைகிறான். உறுதி கொண்டு இன்னல்களை எதிர்த்துப் போரிடுகிறான். அவனிடமிருந்து துன்பமும் தொல்லையும் அகன்றுவிடுகின்றது.

செல்வத்துடன் வளமாக வாழ்பவன், நிறைவுடன் இருப்பதாக மகிழ்கிறான். பலர் அவனைப் பாராட்டுவதைக் கண்டு மகிழ்கிறான். அவனிடம் நல் அறிவும் மறைகிறது. தனக்கு எதிர் காலத்தில்