பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

13

விடு. இன்று நீ எப்படி வாழ்கின்றாயோ அதைப் பொருத்தே உன் வருங்காலம் அமையும். நீ எதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறாயோ அதைத் தாமதமின்றி இப்போது செய்து விடு. காலையிலேயே செய்து விடக்கூடடியதை மாலையில் செய்திடலாம் என்று தள்ளிப் போடாதே.

சோம்பல் தொல்லையைத் தான் தரும். சோம்பல் தேவைகளை உண்டாக்கும். உழைப்பு மகிழ்ச்சியைத் தரும். கடும் உழைப்பே செல்வத்தைத் தரும். இல்லாமையைப் போக்கும் வெற்றியைத் தரும்; முன்னேற்றத்தைத் தரும். சோம்பலைத் தனக்கு எதிரி என்று கருதுபவனே அனைத்தையும் அடையக் கட்டியவன். அவன் காலையில் எழுவான்; காலம் கடந்து உறங்குவான்; சிந்தித்துச் செயல்படுவான்; உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்வான்.

சோம்பித் திரிபவன் அவனுக்கே சுமையானவன். பொழுது போகவில்லையே எனத் தவிப்பான். அவன் காலத்தின் மதிப்பை உணராதவன். முகில் மறைவதுபோல அவன் வாழ்நாளும் மறைந்து விடும். அவன் இறந்த பிறகு அவனைப்பற்றி நினைக்க எதுவும் இருக்காது.

அவன் உடல் பிணியால் பீடிக்கப்படும்; நடமாடக் கூட ஆற்றலற்று அவன் சிந்தனை