பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

காலம் பிள்ளைகளுக்கு அமையும். நல்ல பல உண்மைகளைப் பெற்ற பிள்ளை அறிந்திருக்கச் செய்திடு.

பெற்ற பிள்ளைகளின் மனப்போக்கையும், ஆசைகளையும் தந்தை கண்டறிந்து, கூற வேண்டிய அறிவுரைகளைக் கூறி, நல்வழி காட்டுவது தந்தையின் கடமை, தீய பழக்க வழக்கங்களில் இருந்து பிள்ளைகளைக் காப்பது தந்தையின் கடமை. ஒழுக்க வாணனாக வளரும் பிள்ளை பிற்காலத்தில் புகழ் அடைந்து தந்தைக்கும் பெருமையைச் சேர்ப்பான்.

மகனை முட்டாளாக வளர்த்தால், பிற்காலத்தில் மகனைத் தந்தையே கடிந்து கொள்ள வேண்டி இருக்கும். நல்ல முறையில் வளர்க்கப்பட்ட மகன் தந்தையின் இறுதிக் காலத்தில் பெருமைக்குரியவனாக இருப்பான்.

மண்ணுக்கு உரிமைக்காரன் நீ. பயிரிடாமல் இருக்காதே. நீ எந்த விதையை எப்படி விதைக்கிறாயோ அதைப் பொருத்தே உன் அறுவடையும் இருக்கும்.

கீழ்ப்படிந்து நடக்க மகனுக்குக் கற்றுக் கொடு. உனக்கு அது நல்லது. எளிமையாக வாழக் கற்றுக்கொடு; எந்த மானக்கேடும் ஏற்படாது.

மகன் நன்றியுள்ளவனாக வளர்க்கப்பட வேண்டும். அதனால் அவன் பல நன்மைகளை அடைவான். இரக்க குணமுடையவனாக.